ரஷ்ய Shopping Mall தீக்கு 37 பேர் பலி

Russia

ரஷ்யாவின் சைபீரிய பகுதியில் உள்ள Kemerovo என்ற நகரில் உள்ள shopping mall  ஒன்றில் ஏற்பட்ட தீக்கு குறைந்தது 37 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காணாமலும் உள்ளனர். இந்த நகரம் ரஷ்ய தலைநகர் மஸ்கோவுக்கு கிழக்கே சுமார் 3,600 km தொலைவில் உள்ளது.
.
மேற்படி தீ ஞாயிறு மாலை 5:00 மணியளவில் ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. இறந்தவர்களில் 11 பேர் சிறுவர்கள் என்றும் கூறப்படுகிறது.
.
2013 ஆம் ஆண்டில் சேவைக்கு வந்திருந்த இந்த mall தொகுதியில் திரைப்பட அரங்குகள், கடைகள், உணவு விடுதிகள், சுமார் 200 மிருகங்களை கொண்ட சிறுவர்களுக்கான மிருக காட்சிச்சாலை என்பன உள்ளன.
.