ரெக்ஸஸில் மீண்டும் சூடு, 5 பேர் பலி

USFlag

அமெரிக்காவின் ரெக்ஸஸ் (Texas) மாநிலத்தில் உள்ள Odessa என்ற சிறு நகரில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற கண்மூடித்தனமான தூப்பாக்கி சூடுகளுக்கு குறைந்தது 5 பேர் பலியாகியும், 21 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
.
ரெக்ஸசின் Dallas நகருக்கும், மேற்கே உள்ள El Paso நகருக்கும் இடையில் உள்ள Odessa என்ற சிறு நகரிலேயே இன்று இந்த கண்மூடித்தனமான சூட்டு சம்பவம் நிகழ்துள்ளது. வியாபார நிலையங்களை நோக்கியே சூடுகள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
.
பலியானோருள் துப்பாக்கி சூட்டை நிகழ்த்தியவரும் அடங்குவார். இவர் ஒரு வெள்ளையர் என்றும், சுமார் 30 வயதுடையவர் என்றும் மட்டுமே தற்போது கூறப்பட்டுள்ளது. இவரை போலீசார் சுட்டு கொன்றுள்ளனர். காயமடைந்தோருள் ஒரு 17 மாத பெண் குழந்தையும், சில போலீசாரும் அடங்குவர்.
.
சிறு நகரான Odessa விலும் அதற்கு அண்மையில் உள்ள இன்னோர் சிறு நகரான Midland இலும் உள்ள மொத்த சனத்தொகை சுமார் 263,000 மட்டுமே.

.