லெபனான் வெடிப்புக்கு அமோனியம் நைத்திரேட் காரணம்

லெபனான் வெடிப்புக்கு அமோனியம் நைத்திரேட் காரணம்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ளூர் நேரப்படி செவ்வாய் மாலை 6:00 மணியளவில் இடம்பெற்ற வெடிப்புக்கு அங்கிருந்த அமோனியம் நைத்திரேட் காரணம் என்று கூறப்படுகிறது. வெடிப்பின் பின் மேலெழுந்த சிவப்பு நிற புகை மண்டலம் அமோனியம் நைத்திரேட் வெடிப்பை உறுதி செய்கிறது.

Ammonium nitrate தாக்கம் அடையும்போது உருவாக்கும் nitrogen dioxide சிவப்பு நிற (reddish-brown) புகையை உருவாகும். அமோனியம் நைத்திரேட் வெடிபொருளாகவும், பசளையாகவும் பயன்படும்.

அந்நாட்டு சனாதிபதி Michel Aoun சம்பவ இடத்தில் 2,750 தொன் அமோனியம் நைத்திரேட் விதிமுறைகளுக்கு முரணான முறையில் வைக்கப்பட்டு இருந்ததாக கூறியுள்ளார். இவை கடந்த 6 ஆண்டுகளாக அங்கு இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆனாலும் அமோனியம் நைத்திரேட் வெடிக்க காரணம் என்னவென்று அறியப்படவில்லை.

இந்த வெடிப்பின் காரணமாக பலியானோர் தொகை தற்போது 78 ஆக உயர்ந்து உள்ளது. அத்துடன் காயமடைந்தோர் தொகையும் 4,000 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் பலர் இடிபாடுகளுள் தற்போதும் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

1995 ஆம் ஆண்டு அமெரிக்கரான Timothy McVeigh வெடிக்க வைத்த 2,300 kg அமோனியம் நைத்திரேட் குண்டுக்கு Oklahoma அரச கட்டிடம் ஒன்று சிதைந்ததில் சிறுவர்கள் உட்பட 168 பேர் பலியாகி இருந்தனர்.

உலகின் பல நாடுகள் லெபனானுக்கு உதவ முன்வந்துள்ளன.