வடகொரியாவின் புதிய ஏவுகணை 13,000 km பாயும்

NorthKoreaTest

வடகொரியா இன்று மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவியுள்ளது. இந்த ஏவுகணை சுமார் 13,000 km பாயும் வல்லமை கொண்டது என கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது. உகந்த கோணத்தில் ஏவினால் இந்த ஏவுகணை அமெரிக்காவின் சிக்காகோ, வெள்ளைமாளிகை உள்ள வாஷிங்டன் DC போன்ற இடங்களை இலகுவில் அடையும்.
.
வடகொரிய நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:00 அளவில் ஏவப்பட்ட இந்த கணை 4,500 km உயரம்வரை சென்று, 1,000 km தொலைவில் வீழ்ந்துள்ளது. எதிரியை தாக்கும் நோக்குடன் ஏவப்படும் கோணத்தில் ஏவாது, இந்த கணை நிலைக்குத்தை அண்டிய கோணத்தில் ஏவப்பட்டு உள்ளது. அவ்வாறு செய்வதன் மூலம் எதிர்பாராத ஆபத்துக்களை தடுக்கலாம்.
.
இந்த ஏவல் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் கருத்து கூறுகையில் “we will take care of it” என்றுள்ளார். ஆனால் அவர் என்ன நடவடிக்கையை எடுப்பார் என்று கூறவில்லை. ஒபாமா காலத்தில் ஒபாமா பலவீனமானவர் என்றும் அதனால் தான் வடகொரியா கணைகளை ஏவுகிறது என்றும் ரம்ப் கூறியிருந்தார். ஆனால் ரம்ப் ஆட்சி காலத்திலேயே அதிபெரிய கணைகள் அதிகம் ஏவப்பட்டு உள்ளன.
.
வடகொரியாவின் முன்னைய பலம் மிக்க கணைகள் 37 நிமிடங்களும், 47 நிமிடங்களும் மட்டுமே பறந்து இருந்தன. ஆனால் இன்றைய கணை 53 நிமிடங்கள் பறந்துள்ளது.
.
அமெரிக்க படைகளின் தலைமையத்தின் (Pentagon) இராணுவ அதிகாரி கேணல் Robert Manning இன்று ஏவப்பட்ட கணை கண்டம் விட்டு கண்டம் பாயும் ICMB (Intercontinental Ballistic Missile) என்பதை உறுதி செய்துள்ளார்.
.