வடகொரியாவின் மிகப்பெரிய ஏவுகணை அணிவகுப்பில்

வடகொரியாவின் மிகப்பெரிய ஏவுகணை அணிவகுப்பில்

வழமைக்கு மாறாக வடகொரியா தனது 75 ஆவது ஆண்டு விழாவை சனிக்கிழமை (2020/10/10) அதிகாலை நிகழ்த்தி உள்ளது. சூரிய வெளிச்சம் பரவ முன்னரே இடம்பெற்ற இந்த இராணுவ அணிவகுப்பில் வடகொரியா இதுவரை அறியப்படாத ஏவுகணை ஒன்றையும் உலகுக்கு காட்டி உள்ளது. இதனால் விசனம் கொண்டுள்ளது ரம்ப்  அரசு.

Pukguksong 4A என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வடகொரியாவிடம் இருந்தமை சனிக்கிழமையே அமெரிக்கா உட்பட உலகுக்கு தெரிந்து உள்ளது.

ரம்புடன் நேரடி பேச்சுக்களை ஆரம்பித்த பின்னர், வடகொரியா புதிய ஏவுகணைகள் பகிரங்கபடுத்துவதை தவிர்த்து வந்தது. அது வடகொரியாவின் கிம் ரம்புடன் 3 நேரடி பேச்சுக்களை செய்ய வழியும் வகுத்தது. ஆனால் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கு இடையில் உடன்படிக்கை எதுவும் ஏற்பட்டு இருக்கவில்லை.

தற்போது ரம்ப் பதவியில் இருந்து விரட்டப்படக்கூடும் என்ற நிலையில் கிம் தனது புதிய ஆயுதத்தை பகிரங்கப்படுத்தி உள்ளார்.

வாகனத்தில் பொருத்தப்பட்ட மேற்படி ஏவுகணை இடத்துக்கு இடம் நகர்த்தப்படக்கூடியது. அவ்வாறு இடத்துக்கு இடம் நகர்த்துவது எதிரியின் கண்ணில் இருந்து மறைக்க வழிவகுக்கும்.