வடகொரியா எச்சரிக்கை, ரம்ப்-கிம் சந்திப்பு சந்தேகத்தில்

NorthKoreaTest

வடகொரியா இன்று புதன்கிழமை தென்கொரியா-அமெரிக்கா இராணுவ பயிற்சி தொடர்பா கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அத்துடன் இரண்டு கொரியாக்களின் உயர்மட்ட அதிகாரிகள் நடாத்தவிருந்த சந்திப்பையும் வடகொரியா இரத்து செய்துள்ளது. அதனால் சிங்கப்பூரில் இடம்பெறவிருந்த ரம்ப்-கிம் தற்போது கேள்விக்குறி ஆகியுள்ளது.
.
தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து தென்கொரியாவில் நடாத்தவிருந்த Max Thunder என்ற இராணுவ பயிற்சி காரணமாகவே வடகொரியா விசனம் கொண்டுள்ளது.”நாங்கள் வழங்கும் நல்லென செயல்களுக்கும், சந்தர்ப்பங்களும் ஒரு எல்லை உண்டு” என்றுள்ளது வடகொரியா.
.
வடகொரியா இந்த விசனத்தை வெளியிட்டு இருந்தாலும், ஜூன் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள ரம்ப்-கிம் சந்திப்பு தொடர்பாக எதையும் இதுவரை அறிவிக்கவில்லை என்கிறது அமெரிக்கா.
.
இரண்டு கிழமை காலத்தில் இடம்பெறும் Max Thunder பயிற்சியில் அமெரிக்காவின் நவீன F-22 யுத்த விமானம் மற்றும் B-52 குண்டு வீசும் விமானம் உட்பட சுமார் 100 விமானங்கள் பங்கு கொள்ளும்.
.