வடகொரியா ஏவியது மீண்டுமொரு ஏவுகணை

NorthKoreaTest

வடகொரியா மீண்டும் ஒரு ஏவுகணையை இன்று ஏவியுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளி காலை 6:57 மணியளவில், வடகொரியாவின் தலைநகருக்கு அண்மையில் உள்ள Sunan என்ற இடத்தில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டு உள்ளது.
.
தென்கொரியா மற்றும் ஜப்பான் கணிப்புகளின்படி இந்த ஏவுகணை 770 km உயரம் சென்று, 3,700 km தூரம் கிழக்கே பாய்ந்து பசுபிக் கடலுள் வீழ்ந்துள்ளது. முன்னரைப்போல் இம்முறையும் வடகொரியாவின் ஏவுகணை ஜப்பான் மேலாக சென்றுள்ளது. அமெரிக்காவின் படைகள் நிறைந்த குஆம் (Guam) தீவு 3,700 km தூரத்திலும் குறைவான தூரத்திலேயே உள்ளது.
.
ஒரு நாட்டின் மேலாக பறக்க, விமானங்கள் அந்நாட்டு அனுமதியை பெறவேண்டும் என்ற சர்வதேச சட்டம் இருந்தாலும், செய்மதிபோல் அதிக உயரத்தில் செல்லும் கலங்கள் இந்த சட்டத்துள் அடங்கா.
.

Cold War காலத்தில், உலகின் முதலாவது செய்மதியான ரஷ்யாவின் ஸ்புட்னிக் அமெரிக்கா மேலாக சென்றிருந்தது. ஆனாலும் அமெரிக்கா அதை அமெரிக்கா ஒரு யுத்த அங்கமாக ஆக கருதி இருக்கவில்லை.
.