வடகொரிய வர்த்தகங்களை மூடுகிறது சீனா

NorthKoreaTest

சீனாவில் இயங்கிவரும் வடகொரியாவின் வர்த்தகங்களை மூடுமாறு கூறியுள்ளது சீனா. இந்த கட்டளையின்படி சீனாவில் அமைந்துள்ள அனைத்து வடகொரிய வர்த்தகங்களும் 120 நாட்களுக்குள் மூடப்படல் அவசியம். இந்த கட்டளை ஐ.நா. கட்டளைக்கு உடன்படும் வகையில் அமைந்துள்ளது.
.
வடகொரியா 90% ஏற்றுமதி வருமானத்தை சீனாவிடம் இருந்தே பெறுகிறது.
.
டிரம்ப் அரசு வடகொரியாவுக்கு எதிரான சீனாவின் நடவடிக்கைகளை கொண்டாடினாலும், சீனாவின் உள்நோக்கம் என்னவென்பது புதிராகவே உள்ளது.
.
ஆதியில் இருந்தே சீனா பேச்சுவார்த்தைகளுக்கு உதவி செய்யலாம் என்றும், ஆனால் பேச்சுக்கள் நேரடியாக வடகொரியாவுடன் செய்யப்படல் வேண்டும் என்று கூறி வந்துள்ளது. அவ்வாறு செயல்படுவதன் மூலம் வடகொரியாவின் செயல்களுக்கு சீனா பொறுப்பல்ல என்பதை உணர்த்துகிறது சீனா.
.
வடகொரியா மீது தண்டனைகளை விதித்தாலும், சதாம், கடாபி போன்றோருக்கு அமெரிக்கா செய்ததை சீனா வடகொரியாவில் செய்ய விடாது. இந்நிலையில் அமெரிக்கா மீண்டும் வடகொரியாவுடனேயே நேரிடியாக பேச்சுக்களை நடாத்த முனிவரால் வேண்டும்.
.
சீனாவின் வெளியுறவு அமைச்சர் கொரியாவில் எவ்வகை யுத்தமும் இடம்பெற தமது ஆதரவு இல்லை என்றுள்ளார் (we are opposed to any war on the Korean peninsula, and the international community will never allow a war which would plunge people into an abyss of misery).
.