வன்கூவரில் C$47,700 கட்டணம் தாள்கள் மூலம் செலுத்தல்

வன்கூவரில் C$47,700 கட்டணம் தாள்கள் மூலம் செலுத்தல்

கனடாவின் British Columbia மாநிலத்தில் உள்ள வன்கூவர் நகர அரசுக்கு அங்கு குடியிருக்கும் ஒருவர் தனது C$47,700 கட்டணத்தை C$20 டாலர் தாள்கள் மூலம் செலுத்தி உள்ளார். இவர் செலுத்திய தாள்களின் எடை 2.2 kg. இது 2014ம் ஆண்டில் இடம்பெற்ற சம்பவம் என்றாலும் தற்போதே இந்த உண்மை பகிரங்கத்துக்கு வந்துள்ளது.

இது மட்டுமன்றி பலர் அங்கு காசோலை போன்றவற்றை பயன்படுத்தாது, தாள் மூலம் தமது கட்டணங்களை செலுத்தி உள்ளனர். 2017ம் ஆண்டு ஒருவர் C$44,463 கட்டணத்தை பண தாள்கள் மூலம் செலுத்தி உள்ளார்.

அத்துடன் வன்கூவர் நகர அரசின் உரிமை கொண்ட Mountain View Cemetery என்ற மயானத்துக்கும் 2016ம் ஆண்டு ஒருவர் C$28,500 கட்டணத்தையும், 2017ம் ஆண்டு இன்னொருவர் C$25,960 கட்டணத்தையும் தாள்கள் மூலமும் செலுத்தி உள்ளனர்.
2001 முதல் 2020 வரையான 9 ஆண்டுகளில் 1,905 பேர் C$5,000 க்கும் அதிகமான கட்டணங்களை தாள்கள் மூலம் செலுத்தி உள்ளனர் என்றும் அறியப்பட்டு உள்ளது.

அந்த நாகரில் உள்ள Coastal Front என்ற அமைப்பே இந்த தரவுகளை Freedom of Information வழி மூலம் பெற்று வெளியிட்டு உள்ளது. அதேவேளை இது தொடர்பாக விசாரணை செய்யும் நீதிபதி Austin Cullen னின் விசாரணை அறிக்கை வரும் டிசம்பர் மாதம் 15ம் திகதி வெளிவரும்.

தாள் மூல பெரும் கட்டணங்கள் செலுத்தப்படல் பண கடத்தலுக்கு (money laundering) உதவியாக அமையலாம் என்ற பயத்தால் தற்போது C$10,000 வரை மட்டுமே தாள்கள் மூலம் நகர கட்டணங்களை செலுத்தலாம் என்று சட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

சிறு தொகைகளை நாணயத்தாள் மூலம் கட்டணங்களை செலுத்துவது வளமை என்றாலும், பல்லாயிரம் டாலர்களை தாள் மூலம் செலுத்துவதற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

அதேவேளை Sarah Wu என்பவர் சீனாவில் இருந்து US$200,000 பணத்தை இடைத்தரகர் மூலம் தாள்களில் நகர்த்த முயன்றவேளை அத்தொகை வேறு ஒருவரால் இடைமறித்து எடுக்கப்பட்டு இருந்தது. அதற்கான வழக்கு ஒன்று வன்கூவர் பகுதி நீதிமன்றில் உள்ளது.