வரிக்கொடுமையால் ரஷ்ய பிரசையாகும் பிரெஞ்சு நடிகர்

Gerard Depardieu என்பவர் 1948 ஆம் ஆண்டு பிரான்சில் பிறந்த ஒரு நடிகர். அண்மையில் இந்திய நடிகரான சுராஜ் ஷர்ம (Suraj Sharma) நடித்த Life of Pi என்ற படத்திலும் இவர் நடித்திருந்தார்.

அண்மை காலங்களில் பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அந்த நாடுகள் உயர் வருமானம் கொண்டோரின் அரச வரியை பாரிய அளவில் அதிகரித்தன. அதன்படி பிரான்சும் 1 மில்லியன் யுரோக்களுக்கும் அதிகமான வருட வருமானம் கொண்டோரிடமிருந்து அவர்களின் வருமானத்தின் 75% ஐ வரியாக பெற திட்டமிட்டது. (ஆனால் அந்த திட்டம் இப்போதும் சட்ட இழுபறியில் உள்ளது). தற்போது இந்த வரி 41% மட்டுமே.

இந்த 75% வரி திட்டத்தால் ஆத்திரமடைந்த Gerard Depardieu பிரான்ஸை விட்டு வெளியேறி பெல்ஜியத்தில் வீடு ஒன்றை வாங்கி குடியிருந்தார். அதேவேளை ரசியாவிலும் குடியுரிமைக்காக விண்ணப்பித்திருந்தார். ரஸ்சிய அதிபர் பூட்டன் தற்போது Gersrd க்கு ரஸ்சிய குடியுரிமையுடன் கடவுச்சீட்டும் வழங்கியுள்ளார். ரஷ்சியாவில் வருமான வரி 13% மட்டுமே.

Gerard தனது கூற்றில் தான் கடந்த 45 வருடங்களில் 145 மில்லியன் யூரோக்களை வரியாக செலுத்தியதாக சொல்லியுள்ளார்.

அதேவேளை பிரான்சை ஆளும் இடதுசாரி கட்சி உறுப்பினர்கள் Gerard மீது சொல் தாக்குதல்களை நடாத்தியுள்ளனர். பிரெஞ்சு பிரதமர் Gerard ஐ “shabby” என்றுள்ளார்.