வர்த்தக யுத்தம் வெள்ளி ஆரம்பம்

EU

அமெரிக்காவுக்கும் ஏனைய பல நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக யுத்தம் வெள்ளி (ஜூன் 1) ஆரம்பமாகிறது. அண்மையில் ரம்ப் அரசு ஐரோப்பிய நாடுகள், கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் உட்பட பல நாடுகளிலிருந்தான இரும்பு, அலுமினியம் போன்ற உலோகங்களுக்கு புதிதாக முறையே 25%, 10% இறக்குமதி வரி நடைமுறை செய்யவிருந்தது. பின்னர் அந்த தீர்மானம் ஜூன் 1 வரை இடை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
.
இடைநிறுத்தி வைக்கப்பட்ட காலம் இன்று வியாழன் சாமத்தில் முடிவடைவதாலும், இதுவரை ரம்ப் விரும்பியவாறு இணக்கங்கள் ஏற்படாததாலும், மேற்படி உலோகங்கள் மீதான அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரி வெள்ளிக்கிழமை நடைமுறைக்கு வருகிறது.
.
வெள்ளி வரவுள்ள புதிய வரிக்கு பதிலடி வரிகளை நடைமுறை செய்யவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. அமெரிக்க தயாரிப்புகளான Harley-Davidson மோட்டார்சைக்கிள், Levi jeans, whiskey, ஆரஞ்சு பழரசம் போன்ற பொருட்களுக்கு தமது பக்கத்தில் புதிய வரிகளை நடைமுறை செய்யவுள்ளன ஐரோப்பிய நாடுகள்.
.
ஜெர்மன் அதிபர் Merkel அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சட்டத்துக்கு முரணானது (unlawful) என்றும் உலக வர்த்தகத்தை பலமாக பாதிக்கும் என்றும் கூறியுள்ளார்.
.
மெக்ஸிகோ தாம் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் தகட்டு உலோகங்கள், இறைச்சி வகைகள், ஆப்பிள், திராட்சை போன்ற பொருள்களுக்கு புதிய இறக்குமதி வரிகள் நடைமுறை செய்யவுள்ளதாகவும் கூறுகிறது.
.
கனடாவும் அமெரிக்காவில் இருந்து பெறும் சில உலோகங்களுக்கு புதிய வரிகளை நடைமுறை செய்யவுள்ளது.
.

மேற்படி நாடுகள் அனைத்தும் அமெரிக்கா மீதான WTO வழக்குகளையும் தொடரவுள்ளன.
.