வர்த்தக வழிவகுப்பில் இலங்கை 99 ஆம் இடத்தில்

DoingBusiness2020

வர்த்தகத்துக்கு சாதகமான வழிகளை வழங்குவதில் இலங்கை 99 ஆம் இடத்தில் உள்ளது என்கிறது உலக வங்கியின் Doing Business 2020 என்ற ஆய்வு அறிக்கை.
.
வர்த்தகத்தை ஆரம்பித்தல், நிர்மாண உரிமைகள் பெறல், மின் இணைப்பு பெறல், சொத்துக்களை பதிவுசெய்தல், கடன்பெறல், முதிலீடுகளை பாதுகாத்தல், வரி, இறக்குமதி/ஏற்றுமதி வசதிகள் போன்ற பல விசயங்கள் இந்த கணிப்பில் உள்ளடக்கப்பட்டு இருந்தன.
.
நியூசிலாந்து 86.8 புள்ளிகளை பெற்று வர்த்தகம் செய்வதற்கு முதலாவது இலகுவான நாடாக உள்ளது. சிங்கப்பூர் 86.2 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்திலும், 85.3 புள்ளிகளை பெற்ற ஹாங் காங் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
.
அமெரிக்கா 6 ஆம் இடத்திலும், பிரித்தானியா 8 ஆம் இடத்திலும், கனடா 23 ஆம் இடத்திலும் உள்ளன. சீனா 77.9 புள்ளிகளை பெற்று 31 ஆம் இடத்தில் உள்ளது.
.
தென்கிழக்கு ஆசியாவில் 71.0 புள்ளிகளை பெற்ற இந்தியா 63 ஆம் இடத்தில் உள்ளது. பூட்டான் 89 ஆம் இடத்திலும், நேபால் 94 ஆம் இடத்திலும், பாகிஸ்தான் 108 ஆம் இடத்திலும், மாலை தீவு 147 ஆம் இடத்திலும், பங்களாதேசம் 168 ஆம் இடத்திலும் உள்ளன.
.
சோமாலியா 20 புள்ளிகளை பெற்று 190 ஆம் இடத்தில் உளது.
.