ரஷ்ய விண்கல ஏவுகணை வீழ்ந்தது, பயணித்தோர் தப்பினர்

Soyuz

சர்வதேச வின் நிலையத்துக்கு (IIS, International Space Station) இரண்டு விண்வெளி வீரர்களை ஏற்றி சென்ற ரஷ்யாவின் சோயூஸ் (Soyuz) ஏவுகணை இயந்திர கோளாறு காரணமாக பயணத்தை தொடராது வீழ்ந்துள்ளது. அதில் பயணித்த இரண்டு வீரர்களும் தப்பி உள்ளனர்.
.
Alesey Ovchiin என்ற ரஷ்ய விண்வெளி வீரரும், Nick Haque என்ற அமெரிக்க வீரருமே இவ்வாறு விபத்தில் இருந்து தப்பியவர்கள்.
.
Soyuz கலம் ஏவப்படத்தில் இருந்து முதல் 90 செக்கன்கள் வரை குளறுபடிகள் எதுவும் இன்றி பயணித்துள்ளது. அதுவரை ஏவுகணை முதலாவது ஏவல் இயந்திரங்களின் உந்தலிலேயே முறைப்படி சென்றுள்ளது. அனால் இரண்டாம் நிலை உந்தலுக்கான இயந்திரங்கள் செயல்படவில்லை. அதனால், ஏவலில் இருந்து 114 செக்கன்களில், அவசரகால பொறிமுறைகள் செயல்பட ஆரம்பித்தன. அவற்றின் செயல்பாடுகள் காரணமாக பயணிகள் இருந்த கலப்பகுதி, குடைகளின் உதவியுடன், பாதுகாப்பாக 400 km தூரத்தில் வீழ்ந்துள்ளது.
.
இந்த விபத்தால், தற்போது IIS இல் உள்ள ஜெர்மன், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளை சார்ந்த 3 வீரர்களும் மேலும் சில மாதங்களுக்கு தொடர்ந்தும் அங்கேயே தங்க வேண்டியிருக்கும். அவர்களுக்கு தேவையான பொருட்கள் அங்கு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
.
2003 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் Columbia space shuttleலும், 1986 ஆம் ஆண்டில் Challenger space shuttleலும் வீழ்ந்த பின் அமெரிக்காவின் கலங்கள் IIS க்கு செல்வது நிறுத்தப்படுள்ளது.
.