விரைவில் அமெரிக்கா-சீனா வர்த்தக மோதல்?

US_China

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் விரைவில் ஓர் வர்த்தக மோதல் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சீனா அமெரிக்காவுடனான ஏற்றுமதி/இறக்குமதி பொருளாதாரத்தில் சுமார் $375 பில்லியன் மேலதிகத்தை வருடம் ஒன்றில் கொண்டுள்ளது (surplus). ஒபாமா ஆட்சியில், 2016 ஆம் ஆண்டில், $347 பில்லியன் ஆக இருந்த சீனாவின் மேலதிகம், ரம்ப் ஆட்சியில், 2017 ஆம் ஆண்டில், $375 பில்லியன் ஆக உயர்ந்து இருந்தது.
.
அண்மையில் ரம்ப் தனது ஆலோசகர்களை அழைத்து, அமெரிக்கா, சீனாவுடனான வர்த்தகத்தில் கொண்டுள்ள வர்த்தக குறைபாட்டை (deficit) குறைக்க திட்டம் ஒன்றை கேட்டிருந்தார். அப்போது அந்த அதிகாரிகள் சீனாவில் இருந்து வரும் பொருட்களுக்கு புதிய வரிகள் நடைமுறை செய்வதன் மூலம் deficitஐ சுமார் $30 பில்லியன் பெறுமதியால் குறைக்க திட்டம் கூறினார். ஆனால் ரம்ப் அது போதாது என்று கூறி, குறைந்தது $60 பில்லியனால் deficit குறைய வேண்டும் என்றுள்ளார்.
.
குறிப்பாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இலத்திரனியல் பொருட்களுக்கும், வாகன பாகங்களுக்கும் இந்த மேலதிக வரி நடைமுறை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
.
பதிலுக்கு சீனாவும் மேலதிக வரிகளை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நடைமுறை செய்யலாம் என்றும் கருதப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவின் Boeing என்ற விமான தயாரிப்பு நிறுவனம் பெருந்தொகை விமானங்களை சீனாவுக்கு விற்பனை செய்கிறது. சீனா அவற்றுக்கு அதிக வரிகளை விதிக்கலாம் என்ற அச்சத்தால் Boeing நிறுவன பங்கு சந்தை பங்கு இன்று மதியம் சுமார் 4.6% பெறுமதியை இழந்திருந்தது.
.
வர்த்தக மோதல்கள் உருவானாலும், அமெரிக்கா உட்பட உலக நாடுகள் சிலகாலங்களுக்கு சீனாவின் உற்பத்தியிலேயே தங்கியிருக்க வேண்டும். டிரம்பின் குடும்ப வர்த்தக பொருட்கள், அவரின் மக்களின் வர்த்தக பொருட்கள் எல்லாம் சீனாவிலேயே தயாரிக்கப்படுகின்றன.
.