வீட்டு கதைகளை வெளியே சொல்லும் Samsung TV

SamsungTV

இதுவரை smart phone கள் நீங்கள் கதைப்பது, GPS மூலம் நீங்கள் செல்லுமிடம், நீங்கள் அனுப்பும் text message போன்றவற்றை மூன்றாம் நபர்களுக்கு விற்று வந்தது நாம் அறிவோம். காவல் துறைக்கு மட்டுமல்ல, இலாப நோக்குடன் இயங்கும் வர்த்தக நிறுவனங்களுக்கும் விற்று வந்தன. அதற்கும் மேலாக Samsung நிறுவனத்தால் தாரிக்கப்பட்டு விற்பனைக்கு வரும் புதிய smart தொலைகாட்சிகளும் இவ்வகை உளவு வேலைகளை செய்யவுள்ளது.
.
இவ்வகை smart தொலைக்காட்சி பெட்டிகள் “Please be aware that if your spoken words include personal or other sensitive information, that information will be among the data captured and transmitted to a third party through your use of Voice Recognition,” என்ற சட்ட குறிப்புடன் விற்பனை செய்யப்படுகிறது.
.
அதாவது இந்த தொலைகாட்சி பெட்டிகள் நீங்கள் உங்கள் வீட்டில், உங்கள் குடும்பத்துடன் கதைப்பது, நீங்கள் கேட்கும் இசை, பாடல், பிள்ளை அழுவது, நாய் குறைப்பது, மா இடிப்பது என்று எல்லாவற்றையும் தமது Voice Recognition ஒலி வாங்கி மூலம் எடுத்து உங்களுக்கு தெரியாதவர்களுக்கு அனுப்பும் உரிமையை நீங்கள் வழங்குகிறீர்கள்.
.
இதுபற்றி Samsung விளக்கம் அளிக்கையில், இந்த நுட்பம் பாவனையாளர் இருக்கும் இடத்தி இருந்து கொண்டே வாயால் கூறி channel மாற்றலாம், வாயால் கூறியே Internet ஐ பாவனை செய்யலாம் என்றுள்ளது. இதனை விரும்பாதவர்கள் இதை நிறுத்தலாம் என்றும் கூறப்படுள்ளது. ஆனால் பலர் இவ்வாறு நிறுத்துவது இல்லை.
.
உதாரணமாக பல்லாயிரக்கணக்கானோர் தமது webcam களின் password ஐ மாற்றி அமைக்காது default password உடனேயே வைத்திருந்ததால் hackers அவர்களின் உள்வீடுகளை Internet எங்கும் video மூலம் பரவவிட்டது நாம் அறிவோம்.