வெசாக்கை ஆரம்பிக்க வருகிறார் மோதி

Modi

வரும் மே 12 ஆம் திகதி கொழும்பில் வெசாக் தினத்தை ஆரம்பித்து வைக்க இலங்கை வருகிறார் இந்திய பிரதமர் மோதி. இந்த செய்தியை நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் வியதாச ராஜபக்ச இன்று வெளியிட்டு உள்ளார். இது மோதியின் இலங்கைக்கான இரண்டாவது பயணமாகும்.
.
இந்த விழா BMICH மண்டபத்தில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
.
1999 ஆம் ஆண்டு முதல் ஐ.நா. (UN) மே மாத பூரண சந்திர தினத்தை வெசாக் தினமாக (Day of Vesak) பிரகடனம் செய்துள்ளது.
.

தனது பயணத்தின்போது மோதி இங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவார். இந்திய மீனவர் முரண்பாடுகள் தொடர்பாகவும் உரையாடப்படும்.
.