வெனிசுவேலா-கொலம்பியா எல்லை மூடல்

Venezuela

உள்ளூர் நேரப்படி இன்று வியாழன் மாலை 8:00 மணியுடன் கொலம்பியா நாட்டுடனான தனது தெற்கு எல்லையை மூடுவதாக வெனிசுவேலா (Venezuela) அறிவித்து உள்ளது. அமெரிக்கா தான் கொலம்பியாவுக்கு (Colombia) எடுத்து சென்ற உதவி பொருட்களை வெனிசுவேலா உள்ளே எடுத்து செல்வதை தடுக்கும் நோக்கமே இந்த மூடலுக்கு காரணம்.
.
அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வராத Maduro தலைமையிலான தற்போதைய அரசை கவிழ்த்து, தமக்கு ஆதரவான Guaido தலைமையிலான எதிர்க்கட்சியை அங்கு பதவியில் அமர்த்துவதே அமெரிக்காவின் நோக்கம்.
.
எதிர்க்கட்சி தலைவர் Guaido தன்னை இடைக்கால ஜனாதிபதி என்று கூறி இருந்தும், வெனிசுவேலா இராணுவம் தற்போதும் Maduro வையே ஆதரிக்கின்றது. Maduro தேர்தல் மூலமே பதவிக்கு வந்தவர்.
.
அமெரிக்காவுடன் இணைந்து கனடா, பிரித்தானிய, ஜெர்மனி ஆகிய நாடுகள் எதிர்க்கட்சியை ஆதரித்தாலும், ரஷ்யா, சீனா உட்பட பல நாடுகள் ஆளும் கட்சியையே ஆதரிக்கின்றன.
.
ரம்ப்  தேவைப்பட்டால் தான் அமெரிக்க இராணுவத்தையும் பயன்படுத்த உள்ளதாக கூறியுள்ளார்.

.