வெளியேற்ற கடிதம் Draft மட்டுமே என்கிறது அமெரிக்கா

Pentagon
தாம் ஈராக்கில் இருந்து வெளியேறுவதாக கூறி இன்று வெளிவந்த கடிதம் தமது தரப்பு தவறு என்கிறது அமெரிக்கா. அமெரிக்கா ஈராக்கில் இருந்து வெளியேறும் செய்தி உண்மை இல்லை என்றும், அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் அமெரிக்காவின் முப்படை தலைமையகமான பென்ரகன் கூறியுள்ளது.
.
இவ்வாறு கடிதத்தை மறுத்த அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் Mark Esper இந்த கடிதம் எவ்வாறு பகிரங்கத்துக்கு வந்தது என்பதை அறிய தாம் விசாரணை செய்வதாக கூறியுள்ளார்.
.
ஆனால் அமெரிக்க முப்படைகளின் செயலாளர் (Chairman of the Joint Chief of Staff) Mark Milley அந்த கடிதம் உண்மையானது என்றாலும் அது ஒரு வரைவு (draft) மட்டுமே என்று கூறியுள்ளார். அந்த draft ஈராக்கின் கருத்தை பெறும் நோக்கிலேயே ஈராக்கின் படை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது என்றுள்ளார்.
.
இந்த கடிதம் தவறான சொற்களை கொண்டுள்ளதாகவும் அமெரிக்கா கூறுகிறது.
.