வெள்ளைமாளிகைக்குள் எதிரி, ரம்ப் குமுறல்

Trump

நேற்று புதன்கிழமை The New York Times பத்திரிகை ரம்ப் தொடர்பாக கட்டுரை (Op-Ed) ஒன்றை, அதை எழுதியவரின் பெயரை குறிப்பிடாது, வெளியிட்டு இருந்தது. இந்த கட்டுரையை எழுதியவர் தன்னை ஒரு ரம்ப் அவையின் பிரதான உறுப்பினர் என்றே கூறியுள்ளார். தானும், தன்னைப்போல் அமெரிக்காவின் நலன் விரும்பிகள் சிலரும் ரம்ப்  செயல்பாடுகளில் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற முடிந்ததை செய்வதாக கூறியுள்ளார். இதனால் ரம்ப்  விசனம் கொண்டுள்ளார். இந்த கட்டுரையை எழுதியவர் வீரம் இல்லாதவர் என்றும், நேர்மை இல்லாதவர் என்றும் சாடியுள்ளார் ரம்ப் .
.
ரம்ப் ரஷ்யாவின் பூட்டின், வடகொரியாவின் கிம் ஆகியோரை புகழ்வதையும், அமெரிக்காவின் நட்பு நாடுகளை சாடுவதியும் இந்த கட்டுரையை எழுதிய அதிகாரி சாடியுள்ளார்.
.
தம்முள் மறைந்திருந்து, தமக்கு எதிராக செயல்படும் அதிகாரியை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர் ரம்பின் ஆதரவாளர். தற்போது ரம்ப் அணிக்குள் ஒருவரை மற்றவர் சந்தேகிக்கும் நிலை தோன்றியுள்ளது.
.
ஏற்கனவே உதவி ஜனாதிபதி Mike Pense என்பவரும், வெளியுறவு செயலாளர் Mike Pompeo என்பவரும் தாம் அந்த கட்டுரையை எழுதவில்லை என்று கூறியுள்ளனர். தேசிய புலனாய்வு அதிகாரியான Daniel Coats என்பவரும் தான் அந்த கட்டுரையை எழுதவில்லை என்று கூறியுள்ளார்.
.
இந்த கட்டுரையை எழுதியவரின் பெயர் The New York Times பத்திரிகை அதிகாரிகளுக்கு மட்டுமே தற்போது தெரியும்.
.