வேறு வழியின்றி அமெரிக்கா, சீனாமுதல் கட்ட இணக்கத்தில்

US_China
மேலதிக இறக்குமதி வரிகளை நடைமுறை செய்வதன் மூலம் தான் சீனாவை இலகுவில் அடிபணிய வைப்பேன் என்று கூறிய அமெரிக்க சனாதிபதி ரம்ப் தற்போது, சுமார் 18 மாத பொருளாதார மோதுகையின் பின், முதல்கட்ட இணக்கம் ஒன்றுக்கு (phase one deal) இணங்கி உள்ளார். ஆனாலும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட இந்த முதல் கட்ட உள்ளடக்கும் இணக்கப்பாடுகள் இதுவரை முற்றாக அறிவிக்கப்படவில்லை.
.
வெள்ளி அறிவிக்கப்பட்ட இந்த முதல் கட்ட இணக்கப்பாடு உண்மையில் ஒரு பொருளாதார யுத்த நிறுத்தமே. மிக முக்கியமாக இன்று ஞாயிரு முதல் ரம்ப் அரசு நடைமுறை செய்யவிருந்த சீன இறக்குமதிகள் மீதான மேலதிகமானதும், அதிகூடியதுமான இறக்குமதி வரிகள் நடைமுறை செய்யப்பட மாட்டாது. அதேவேளை சீனாவும் மேலதிக அமெரிக்க தானியங்களை கொள்வனவு செய்ய இணங்கி உள்ளது. ஆனால் மேலதிகமாக கொள்வனவு செய்யப்படவுள்ள தானியங்களின் அளவுகள் அல்லது பெறுமதிகள் முறைப்படி குறிப்பிடப்படவில்லை.
.
ரம்பின் கடும்போக்குக்கு அசையாது சீனா செயல்பட்டதாலேயே ரம்ப் வேறுவழி இன்றி தனது கடும் போக்கை தளர்த்தி உள்ளார் என்று கூறப்படுகிறது. ரம்பின் மேலதிக வரிகளால் சீனாவின் பொருளாதாரம் கவிழாவும் இல்லை.
.
அத்துடன் ரம்பின் ஆதரவாளர்களான அமெரிக்க தானிய உற்பத்தியாளர், இறைச்சி உற்பத்தியாளர் போன்றோரை சீனா குறிவைத்து தண்டித்ததே ரம்பின் இக்கட்டான நிலைக்கு முக்கிய காரணம். இவர்களின் வாக்குகள் ரம்புக்கு அவசியம்.
.
அத்துடன் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள அமெரிக்க சனாதிபதி தேர்தல் காலத்தில் அமெரிக்க பொருளாதாரம் எதிர்பாராத பின்னடைவுகளை அடையக்கூடாது என்பதுவும் ரம்பின் எதிரிபார்ப்பாக இருக்கும்.
.