​சிரியாவில் நீண்டகால அமைதிக்கு அறிகுறி

Syria

2011 ஆம் ஆண்டு அந்நிய நாடுகளின் தூண்டுதலில் ஆரம்பிக்கப்பட்ட ​சிரியாவின் யுத்தம் ஓரளவு அமைதியை அடையும் அறிகுறிகள் தோன்றியுள்ளன. ஆரம்பத்தில் அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளினதும், சவுதி, கட்டார், துருக்கி ஆகிய நாடுகளினதும் உதவியுடன் அரச எதிரணி வேகமாக பெரும் பகுதிகளை கைப்பற்றி இருந்திருந்தாலும், பின்னர் கிடைத்த ரஷ்ய, ஈரான், ஹெஸ்புல்லா ஆதரவுகளுடன் அசாத் அரசு எதிரிகளை முறியடித்து இழந்த பகுதிகளை மீண்டு இருந்தது.
.
இறுதியாக தப்பிய எதிரணிகள் அனைத்தும் சிரியாவின் வடமேற்கே, துருக்கியின் எல்லையோரம் உள்ள இட்லிப் (Idlib) பகுதியில் புகுந்து கொண்டன. ரஷ்யா, ஈரான், ஹிஸ்புல்லா, உதவிகளுடன் இட்லிப் பகுதியிலும் சிரிய அரசு தாக்குதலுக்கு முனையும் போது துருக்கியின் ஜனாதிபதி ரஷ்யா, ஈரான், சிரியா ஆகிய நாடுகளுடன் பேசி ஒரு சமாதான திட்டத்துக்கு வழிவகுத்து உள்ளார்.
.
அந்த சமாதான உடன்படிக்கையின்படி இட்லிப் மீதான தாக்குதல் இடைநிறுத்தம் செய்யப்படும், இட்லிப் பகுதியை சூழ ஒரு ஆயுதமற்ற எல்லைப்பகுதி உருவாக்கப்படும், கிளர்ச்சியாளர் தம்மிடம் உள்ள கனரக ஆயுதங்களை துருக்கி-ரஷ்யா குழுவும் கையளிக்கும், இட்லிப் பகுதி ஊடு செல்லும் M4, M5 போன்ற பிரதான பாதைகள் பொது போக்குவரத்துக்கு திறந்து விடப்படும்.
.
ஆனாலும் அங்கு இயங்கும் அல்கைட (Al Qaeda) வழிவந்த Hayat Tahrir Al Sham போன்ற சுயாதீன ஆயுத குழுக்கள் தொடர்ந்தும் சிறிய அளவில் யுத்தம் புரியலாம்.

.