அகதிகளின் சொத்துக்களை பறிக்க டென்மார்க் சட்டம்

Denmark

டென்மார்க்கில் (Denmark) நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய சட்டம் ஒன்று அங்கு வரும் அகதிகளின் சொத்துக்களை பறிக்கும் உரிமையை அரசுக்கு வழங்கியுள்ளது. இந்த சட்டப்படி சுமார் $1,450 இக்கும் மேலான பெறுமதியுடைய சொத்துக்களை அகதிகளாக வருவோரிடம் இருந்து பறிக்க முடியும். அத்துடன் $1,450 இக்கும் அதிகமான பணம் இருப்பின் அதையும் அரசு பறிக்கும்.
.
இந்த சட்டத்தை வலதுசாரி, இடதுசாரி என்ற வேறுபாடுகள் இன்றி பெருமளவு பாராளுமன்ற உறுப்பினர் ஆதரித்து உள்ளனர்.
.
அதேவேளை ஐ.நா. வின் UNHCR இந்த சட்டம் அகதிகளின் உரிமைகளுக்கு வரையறைகளுக்கு முரணானது என்றுள்ளது.
.
அத்துடன் குடும்ப இணைவு மூலம் வெளிநாட்டவரை டென்மார்க் அழைப்பதும் 3 வருடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை 1 வருடமாகவே இருந்தது.
.

டென்மாக்கில் கடந்த வருடம் 20,000 அகதிகள் மட்டுமே விண்ணப்பித்து இருந்தனர்.
.