அகதிகளை துருக்கி அனுப்ப ஐரோப்பா, துருக்கி இணக்கம்

Syria

நாளை சனிமுதல் ஐரோப்பாவுக்கு வரும் அகதிகளை துருக்கிக்கு அனுப்பி அங்கு முகாமில் இட ஐரோப்பிய ஒன்றியமும் துருக்கியும் இன்று வெள்ளிக்கிழமை இணங்கி உள்ளன. துருக்கியினதும் ஜேர்மனின் Angela Merkel அவர்களின் முயற்சியுமே இந்த உடன்பாட்டுக்கு முக்கிய காரணமாகும். இவ்வாறு செய்வதன் மூலம் இவர்கள் பெரும் தொகை அகதிகள் ஐரோப்பா செல்வதை தடுக்க முனைகின்றனர்.
.
கடந்த வருடம் மட்டும் சுமார் 900,000 அகதிகள் மத்தியகிழக்கு பகுதியில் இருந்து ஐரோப்பா சென்றுள்ளனர். அவ்வாறு பயணம் செய்தோரில் பலர் பலியாகியும் இருந்தனர். குறிப்பாக கடலில் மூழ்கியோர் மிக அதிகம். இன்றுவரை ஐரோப்பா வந்தோர் இன்றைய உடன்படிக்கைப்படி திருப்பி துருக்கிக்கு அனுப்பப்படமாட்டார்.
.
இந்த உடன்படிக்கையின்படி துருக்கி சுமார் U$6.6 பில்லியன் உதவி பெறும். அத்துடன் விசா இன்றி துருக்கி மக்கள் ஐரோப்பா செல்வது தொடர்பாகவும் ஆராயப்படும்.
.

அதேவேளை UNHCR எந்த உடன்படிக்கையாயினும் அது அகதிகளை பாதுகாக்க வேண்டும் என்றுள்ளது.
.