அங் சன் சு கியின் கனடிய குடியுரிமை பறிப்பு

AungSanSuuKyi

பர்மா நாட்டு அங் சன் சு கியுக்கு (Aung San Suu Kyi) வழங்கப்பட்டு இருந்த கனடிய கௌரவ குடியுரிமையை இன்று செவ்வாய் கனடா பறித்துள்ளது. பர்மாவின் ரோஹிங்யா (Rohingya) மக்கள் மீது அந்நாட்டு அரசு செய்து வரும் தாக்குதல்களை சு கி நிறுத்தாமையாலேயே அவரின் கௌரவ குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது.
.
கனடிய கௌரவ குடியுரிமை இழப்பால் சு கி பெரும் பாதிப்பு எதையும் அடையாவிடாலும், இது அவருக்கு ஒரு அவப்பேர் ஆகும்.
.
கனடாவின் மனித உரிமைகள் நூதனசாலையும் (Canadian Human Rights Museum) அங்கிருக்கும் சு கியின் உருவப்படத்தை விரைவில் நீக்கும். இவரின் படத்துக்கு வைக்கப்பட்ட மின்விளக்கு ஏற்கனவே நிறுத்தப்பட்டு உள்ளது.​
.
கனடா இதுவரை 6 பேருக்கு கௌரவ குடியுரிமை வழங்கி இருந்தது. Raoul Wallenberg (1985), Nelson Mandela (2001), Dalai Lama (2006), Aung San Suu Kyi (2007), Karim Aga Khan IV (2009), Malala Yousefzai (2014) ஆகியிரே அந்த 6 பேரும் ஆவர்.
.
அங் சன் சு கியுக்கு 1991 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சமாதானத்துக்கான நோபல் பரிசு (Nobel Peace Prize) தொடர்ந்து அவர் கையிலேயே இருக்கும்.

.