அணுக்குண்டுடையோர் இன்றி அதை அழிக்க ஐ.நா. மாநாடு

UN

ஐக்கிய நாடுகள் சபை அவ்வப்போது சம்பந்தப்பட்டோர் இல்லாது அவர்களின் கைவசமுள்ள விடயங்கள் சம்பந்தமாக பெரும் மாநாடுகள் அல்லது பேச்சுவார்த்தைகள் நடாத்துவது உண்டு. அந்த வகையில் ஐ. நா. இன்று திங்கள் முதல் அணுக்குண்டுகள் இல்லாத உலகை உருவாக்க பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்துகிறது. சுமார் 100 நாடுகள் இதில் பங்கு கொள்கின்றன. ஆனால் அனைத்து அணுகுண்டுகள் கொண்ட நாடுகள் உட்பட, 30க்கும்  மேற்பட்ட நாடுகள் இந்த மாநாட்டில் பங்கு கொள்ளவில்லை. இந்த மாநாட்டு தீர்மானம் சட்டப்படியானதும் அல்ல.
.
கடந்த அக்டோபர் மாதத்தில் அணு ஆயுதங்களை ஐ. நா. மூலம் சட்டப்படி தடை செய்யும் முன்னெடுப்பு ஒன்றை பிரித்தானியா, பிரான்ஸ், இஸ்ரேல், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் எதிர்த்து வாக்களித்து இருந்தன. சீனா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் பங்கெடுக்காது இருந்தன.
.

1945 ஆம் ஆண்டில் இரண்டு அணு குண்டுகளுக்கு இரையாகிய ஒரேயொரு நாடான ஜப்பானும் அணு குண்டுகள் முற்றாக அழிக்கப்படுவதை எதிர்த்து, இந்த பேச்சுவார்த்தையில் பங்கு கொள்ளாது உள்ளது.
.