அணுவாயுத உடன்படிக்கையிலிருந்து வெறியேறினார் ரம்ப்

Trump

ஒபாமா காலத்து அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய 6 நாடுகளும் ஈரானுடன் செய்துகொண்ட அணுவாயுத உடன்படிக்கையில் இருந்து தான் வெளியேறுவதாக ரம்ப் இன்று கூறியுள்ளார். ஒபாமா செய்துகொண்ட எல்லா நடவடிக்கைகளையும் தரம் குறைந்தது என்று கூறும் ரம்ப், ஒபாமா செய்த ஈரான் உடன்படிக்கையையும் தரமற்றது என்று கூறியுள்ளார்.
.
கடந்த சில நாட்களாக பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகள் உடன்படிக்கையில் இருந்து வெளியேற வேண்டாம் என்று ரம்பை கேட்டிருந்தும், அவற்றை எல்லாம் உதாசீனம் செய்த் ரம்ப் இன்று உடன்படிக்கையில் இருந்து வெளியேறி உள்ளார்.
.
ரம்பின் இந்த நடவடிக்கையால் குதூகலம் அடைந்த ஒரேநாடு இஸ்ரேல் மட்டுமே.
.
அமெரிக்கா வெறியேறினாலும், ஏனைய 5 நாடுகளும் உண்டபடிக்கையை மதித்து செயல்படின், ஈரானும் அவர்களுடன் இணைந்து செய்யப்படும் என்றுள்ளது ஈரான். ஆனால் அப்படி செயல்பட பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகள் பொருளாதார அடிப்படியில் அமெரிக்காவுடன் மோத நேரிடும்.
.
ஈரானுடன் இணைந்து செயல்படும் நாடுகளையும் தான் தண்டிக்க உள்ளதாக ரம்ப் கூறியுள்ளார். அந்நிலையில், பிரித்தானிய, பிரென்சு அல்லது ஜேர்மனி நிறுவனம் ஒன்று ஈரானுடன் வர்த்தகம் செய்யின், அமெரிக்கா அந்த வர்த்தக நிறுவனத்தை தண்டிக்கும். அச்செயல் அந்த நாடுகளிடையே வர்த்தக மோதலை உருவாக்கும்.
.

பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனிய போன்ற நாடுகள் அமெரிக்காவுக்கு  அடிபணிந்தால், ஈரான் மீண்டும் அணு சோதனைகளை ஆரம்பிக்கும். இறுதியில் மீண்டும் போரை நோக்கிய முறுகல் நிலை வளரும்.
.

இன்று அமெரிக்கா வெளியேறினாலும், வெளியேற்றம் நடைமுறைக்கு வர 90-நாள் கால அவகாசம் உண்டு

.