அத்திலாந்திக் சீன தளத்தை தடுக்க அமெரிக்கா விரைவு

அத்திலாந்திக் சீன தளத்தை தடுக்க அமெரிக்கா விரைவு

Equatorial Guinea என்ற மேற்கு ஆபிரிக்க நாட்டில் சீனா தனது விமான மற்றும் கடற்படை தளம் ஒன்றை அமைக்க முயற்சித்து வருகின்றது. அந்த முயற்சி கைகூட உள்ள நிலையில் அதை தடுக்க அமெரிக்க அதிகாரிகள் Equatorial Guinea க்கு அடுத்த கிழமை செல்லவுள்ளனர்.

சீனா இங்கு தனது படைத்தளத்தை அமைத்தால் அந்த தளம் அத்திலாந்திக் சமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்த வழி வகுக்கும் என்பதே அமெரிக்காவின் கவலை.

அடுத்த கிழமை அமெரிக்க அதிகாரிகளான Molly Phee மற்றும் மேஜர் ஜெனரல் Kenneth Ekman ஆகியோரே Equatorial Guinea செல்லவுள்ளனர். இவர்களின் நோக்கம் சீன தளத்துக்குக்கான இணக்கத்தில் கையொப்பம் இடலை தடுப்பதே.

சீனா இந்த நாட்டில் ஏற்கனவே ஒரு ஆழமான வர்த்தக துறைமுகத்தை இங்கு கொண்டுள்ளது. இதன் ஆழம் யுத்த கப்பல்களின் பாவனைக்கு போதுமானது.

ஸ்பெயின் நாட்டின் கட்டுப்பாடில் இருந்த Equatorial Guinea 1968ம் ஆண்டே சுதந்திரம் அடைந்து இருந்தது. அன்றுமுதல் இங்கு ஓர் குடும்ப ஆட்சியே பதவியில் உள்ளது.