அபுதாபியில் இஸ்லாமிய பள்ளிவாசல் சென்ற ரம்ப் 

அபுதாபியில் இஸ்லாமிய பள்ளிவாசல் சென்ற ரம்ப் 

அமெரிக்க சனாதிபதி வியாழக்கிழமை UAE யின் தலைநகர் அபுதாபியில் உள்ள Sheikh Zayed Grand Mosque என்ற பள்ளிவாசலுக்கு சென்றுள்ளார். இதுவே ரம்பின் முதலாவது பகிரங்க பள்ளிவாசல் பயணம் என்று கூறப்படுகிறது.

ரம்ப் பள்ளிவாசல் விதிக்கு ஏற்ப தனது காலனியை பள்ளிவாசலுக்கு வெளியே கழற்றி விட்டே உள்ளே சென்றார். உள்ளே சென்ற இவர் “Isn’t this beautiful?” என்று கேள்வியையும் கேட்டு “It is so beautiful” என்று பதிலையும் கூறியிருந்தார்.

இந்த பள்ளிவாசல் உல்லாச பயணிகளை கவரும் ஒரு நிலையமாகும்.

ரம்ப் தனது முதலாவது ஆட்சியில் இஸ்லாமியரை பெரும்பான்மையாக கொண்ட நாட்டவர் அமெரிக்கா செல்வதை தடை செய்திருந்தனர். அக்காலத்தில் பள்ளிவாசல்கள் மதவாதத்தை திணிக்கின்றன என்று ரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.

தற்போது சவுதி, UAE, கட்டார் ஆகிய நாடுகளில் ரம்ப் குடும்பத்துக்கு பெருமளவு வணிகங்கள் உள்ளன.

மிக குறைந்த எண்ணிக்கையிலான அமெரிக்க சனாதிபதிகளே பள்ளிவாசல் சென்றுள்ளனர். 1957ம் ஆண்டு Eisenhower வாஷிங்டன் D.C. யில் கட்டப்பட்ட பள்ளிவாசலை திறந்தார். 2001ம் ஆண்டு, 9/11 தாக்குதலின் பின், W. Bush இந்த பள்ளிவாசல் சென்று இருந்தார். 2016ம் ஆண்டு ஒபாமா Baltimore நகரத்து பள்ளிவாசல் ஒன்றுக்கு சென்று இருந்தார்.