அமெரிக்கர் அடுத்த கனடிய பிரதமர்?

Canada

இந்த மாதம் 21 ஆம் திகதி கனடாவில் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது. தற்போதைய பிரதமர் Justin Trudeau அடுத்த தடவையும் பதவிக்கு வருவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பதிலாக எதிர்கட்சியான Conservative கட்சியின் தலைவர் கனடாவின் அடுத்த பிரதமர் ஆகும் வாய்ப்பும் உள்ளது.
.
இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் Conservative கட்சி தலைவர் Andrew Scheer தற்போதும் ஒரு இரட்டை குடியுரிமையாளர். அவரிடம் கனடா, அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளின் குடியிருமைகளும் உண்டு.
.
ஆனாலும் கனடாவில் வேறு நாடு ஒன்றில் குடியிருமை கொண்டவர் பிரதமர் ஆக முடியாது என்று சட்டமில்லை. அதனால் சட்டப்படி Andrew Scheer ஒரு இடரிலும் இல்லை.
.
ஆனால் இதே Andrew Scheer முன்னாளில்  Michaelle Jean என்ற முன்னாள் கனடிய Governer General மீது, அவரின் பிரான்ஸ்-கனடா இரட்டை குடியிருமை தொடர்பாக, கேள்விகள் எழுப்பியவர்.
.
Andrew Scheer வின் தந்தையார் ஒரு அமெரிக்கர். அவர் கனடிய பெண்ணை திருமணம் செய்து Ottawa நகரில் வாழ்ந்தார். தந்தை மூலமே Andrew Scheer அமெரிக்கா குடியுரிமை பெற்றார்.
.