அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி Trump

Trump

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக டொனால்ட் ரம் (Donald Trump) தெரிவு செய்யப்படு உள்ளார். இவர் அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாவார். இவர் Republican கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றாலும், இவர் வழமையான Republican அமைப்புக்கு (establishment) வெளி நபர் ஒருவரே.
.
Democrats கட்சி சார்பிலும் பேர்னி சாண்டர்ஸ் (Bernie Sanders) என்றவர் அக்கட்சிக்குள் பெரும் ஆதரவுடன் இருந்து வந்திருந்தாலும், ஹெலரி கிளின்டன் (Hillary Clinton) உட்கட்சி (establishment) ஆதரவு காரணமாக சாண்டர்ஸை பின்தள்ளி அக்கட்சி சார்பில் போட்டியிட்டு இருந்தார்.
.
அமெரிக்காவில் கலிபோர்னியா போன்ற சில மாநிலங்கள் எப்போதுமே Democrats ஆதரவு கொண்டவை. Texas போன்ற வேறுசில மாநிலங்கள் எப்போதுமே Republican ஆதரவு கொண்டவை. அதனால் Florida போன்ற swing states என்று அழைக்கப்படும் சில மாநிலங்களே ஜனாதிபதி தேர்தலை தீர்மானம் செய்பவை. Florida, Pennsylvania போன்ற swing statesகளை வென்றதாலேயே Trump வென்றுள்ளார்.
.

அரசியல் பதவி எதையுமே கொண்டிருக்காத ரம்ப் எப்படி நாட்டை ஆழ்வார் என்று எவருக்கும் தெரியாது. அடுத்து வரும் 4 நான்கு வருட அமெரிக்கா அரசியலும், உலக அரசியலும் பல வேடிக்கை நிறைந்தவையாக இருக்கும்.
.