ஈரான் மீதான தடையை நீடிக்க ஐ.நா. மறுப்பு

ஈரான் மீதான தடையை நீடிக்க ஐ.நா. மறுப்பு

ஈரான் மீதான ஐ. நாவின் ஆயுத தடையை தொடரவைக்கும் அமெரிக்காவின் ஐ.நா. மூலமான இரண்டாம் முயற்சியும் இன்று தோல்வி அடைந்தது. முன்னர் முயன்ற Resolution 2231 முறை பலிக்காத நிலையில் கடந்த வியாழன் அமெரிக்கா மீண்டும் Joint Comprehensive Paln of Action (JCPOA) மூலமான ‘snap back’ விதியை பயன்படுத்தி ஈரான் மீதான ஆயுத தடையை நீடிக்க முயன்று இருந்தது. அந்த முயற்சிக்கே ஐ. நா. இன்று செய்வாய் மறுப்பு தெரிவித்து உள்ளது.

2015 ஆம் ஆண்டு ஒபாமா ஆட்சியும், பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளும் ஈரானுடன் செய்துகொண்ட JCPOA என்ற அணு உடன்படிக்கையின்படி ஈரான் இணக்கத்துக்கு முரணாக செயல்பட்டால் ஏனைய நாடுகள் உடனடியாக ஈரான் மீது முழு அளவிலான தடையை நடைமுறை செய்யலாம்.

ஆனால் ஒபாமா செய்துகொண்ட உடன்படிக்கையை ஏளனம் செய்த ரம்ப் 2018 ஆம் ஆண்டு JCPOA உடன்படிக்கையில் இருந்து வெளியேறி தமது சொந்த தடைகளை ஈரான் மீது விதித்து இருந்தார். உடன்படிக்கையில் இருந்து தாம் வெளியேறினாலும் தற்போது மீண்டும் தமக்கு snap back யை நடைமுறை செய்ய உரிமை உண்டு என்று வாதாடுகிறார் ரம்ப். ஆனால் Dominican Rebublic தவிர்ந்த ஏனைய ஐ. நா. பாதுகாப்பு சபை அங்கத்துவ நாடுகள் ரம்ப் தரப்பு வாதத்தை மறுகின்றன.

ஐ. நா. பாதுகாப்பு சபையின் தலைமையை தற்போது இந்தோனேசியா கொண்டுள்ளது. அதன்படி சபை தலைவர் Diani Triansyah ஐ.நா. தீர்மானத்தை இன்று வெளியிட்டு உள்ளார்.

ஈரான் மீதான ஐ.நாவின் ஆயுத தடை அக்டோபர் மாதம் 18 ஆம் திகதி முடிவடையும். அதை தடுக்கவே அமெரிக்காவும் இஸ்ரேலும் பலமாக முயற்சிக்கிறது.