அமெரிக்காவின் செவ்வாய் வரிக்கு சீனா புதன் வரி

US_China

அமெரிக்காவின் ரம்ப் அரசு நேற்று செய்வாய் மீண்டுமொரு புதிய இறக்குமதி வரியை (tariffs) சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு விதித்திருந்தது. அதற்கு பதிலடியாக சீனா இன்று புதன் மீண்டும் ஒரு புதிய இறக்குமதி வரியை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதித்துள்ளது.
.
செய்வாய் அமெரிக்கா புதிதாக நடைமுறை செய்த $16 பில்லியன் வரிக்கு நிகராக சீனாவும் $16 பில்லியன் பெறுமதியான அமெரிக்க பொருட்களுக்கு புதிய வரியை நடைமுறை செய்கிறது. இருதரப்பு வரிகளும் இந்த மாதம் 23 ஆம் திகதி முதல் அறவிடப்படும்.
.
இன்று புதன் சீனா அறிவித்த புதிய வரிகள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மசகு எண்ணெய், டீசல், நிலக்கரி, உருக்கு, மருத்துவ உபகரணங்கள் போன்ற 333 பொருட்களுக்கு அறவிடப்படும்.
.
ரம்ப் அரசு இறக்குமதி வரி யுத்தத்தை ஆரம்பித்த காலத்தில் இருந்து சீனா ஒவ்வொரு புதிய அமெரிக்க வரிக்கும் பதில் வரியை தனது தரப்பிலும் நடைமுறை செய்து வருகிறது.
.
அமெரிக்கா நடைமுறை செய்துவரும் புதிய இறக்குமதி வரிகளும், அவற்றுக்கு பதிலடியாக மற்றைய நாடுகள் நடைமுறை செய்துவரும் புதிய இறக்குமதி வரிகளும் உலக பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும் என்று IMF ஏற்கனவே கூறியுள்ளது.

.