அமெரிக்காவின் பாகிஸ்தான் உதவி மேலும் குறைப்பு

Pakistan

அமெரிக்காவினால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்திருந்த உதவி மேலும் குறைக்கப்பட்டு உள்ளது. கடந்த வருடம் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா $534 மில்லியன் உதவியை வழங்கி இருந்தது. ஆனால் டிரம்ப் அரசு 2008 ஆம் ஆண்டுக்கான பாகிஸ்தானின் உதவியை $100 மில்லியன் ஆக குறைத்துள்ளது. அதையும் கடனாக வழங்குவதா அல்லது நன்கொடையாக வழங்குவதா என்று அமெரிக்கா இதுவரை முடிவு செய்யவில்லை.
.
அண்மை காலங்களில் அமெரிக்கா முன்னாள் எதிரி இந்தியாவுடன் உறவை அதிகரித்து, அதேவேளை முன்னாள் நண்பன் பாகிஸ்தானுடனான உறவை குறைத்தும் வந்துள்ளது.
.
தற்போது பாகிஸ்தான் தனது எல்லை நாடுகள் மூன்றுடன் முரண்பட்டு உள்ளது. அமெரிக்க நட்பு நாடுகளான இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுடனும், ஈரானுடனும் எல்லைகளில் சண்டையில் ஈடுபட்டு உள்ளது. பாகிஸ்தான் சுனி இஸ்லாமிய ஆயுத குழுக்களை வளர்ப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
.
அதேவேளை பாகிஸ்தானுக்கு உதவ சீனாவும், ரஷ்யாவும் முன்வந்துள்ளன. சீனா பெரும் முதலீடுகளை பாகிஸ்தானில் செய்து வருகிறது. ரஷ்யா பாகிஸ்தான் நட்பு இயக்கமான தலபானுடன் தொடர்புகளை பேணி வருகிறது. இதே தலபான் Cold War காலத்தில் அமெரிக்காவின் உதவியுடன் USSRக்கு எதிராக யுத்தம் செய்திருந்தது.
.