அமெரிக்காவின் முடக்கத்தில் புலிகளின் $0.5 மில்லியன்

அமெரிக்காவின் முடக்கத்தில் புலிகளின் $0.5 மில்லியன்

புலிகளின் $580,811 பணத்தை முடக்கி வைத்துள்ளதாக அமெரிக்காவின் Department of Treasury வியாழக்கிழமை கூறியுள்ளது. அமெரிக்காவின் பயங்கரவாத குழுக்கள் மீதான தடையின் அங்கமாவே புலிகளில் பணம் முடக்கப்பட்டு உள்ளது. சுமார் 70 ஆயுத குழுக்களுக்கு சொந்தமான $63 மில்லியன் பணத்தை அமெரிக்கா முடக்கி வைத்துள்ளது.

பாகிஸ்தானை தளமாக கொண்ட Lashkar-e-Taiba என்ற குழுவின் $342,000 பணமும், Harkat-ul-Mujahideen-al-Islami என்ற குழுவின் $45,798 பணமும், Jaish-e Mohammed என்ற குழுவின் $1,725 பணமும் மேற்படி $63 மில்லியன் பணத்துள் அடங்கும். இக்குழுக்கள் பொதுவாக காஸ்மீர் பகுதியில் செயற்படுபவை.

அல்கைடாவுக்கு (AL-Qaeda) உரிய $3.9 மில்லியன் பணத்தையும் அமெரிக்கா முடக்கி வைத்துள்ளது. இத்தொகையே முடக்கி வைக்கப்படுள்ள தொகைகளில் அதிகமானது.

முடக்கப்பட்ட தலிபானின் தொகை தற்போது $59,065 ஆக குறைந்துள்ளது. முன்னைய ஆண்டில் இத்தொகை $296,805 ஆக இருந்தது.

அதேவேளை பயங்கரவாதிகளுக்கு உதவும் நாடுகள் என்று கூறி ஈரான், சூடான், சிரியா, வடகொரியா ஆகிய நாடுகளின் $200 மில்லியனையும் அமெரிக்கா முடக்கி வைத்துள்ளது.