அமெரிக்காவின் WTC எண்ணெய் பரல் ஒன்றுக்கு $0.11 மட்டுமே

Oil_Well

இன்று திங்கள் அமெரிக்காவின் WTI (Western Texas Intermediate) பரல் ஒன்று $0.11 ஆக (11 அமெரிக்க சதங்கள்) வீழ்ந்துள்ளது. அதாவது வெள்ளிக்கிழமை கொண்டிருந்த பெறுமதியின் 99% பெறுமதியை இழந்துள்ளது WTI. சுமார் 10 வருடங்களுக்கு முன் $160.00 வரை அதிகரித்த எண்ணெய் இன்று பாவனை குறைவால் தேடுவார் அற்று உள்ளது. பரல் ஒன்றுக்கான இன்றைய எண்ணெய் விலை 1946 ஆம் ஆண்டில் இருந்த விலையிலும் குறைந்தது.
.
எண்ணெய் விலை உயர்வாக இருந்த காலத்தில் பணத்தில் மிதந்த மத்தியகிழக்கு நாடுகள் தற்போது தமது செலவுகளை செலுத்தும் நோக்கில் அரச bond மூலம் கடன் பெறுகின்றன. ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) பிரதான அங்கமான அபுதாபி ஞாயிறு தாம் $7 பில்லியன் கடனை bond மூலம் பெறுவதாக கூறி உள்ளது.
.
கடந்த கிழமை சவுதி அரேபியாவும் தாம் அரச bond மூலம் $7 பில்லியன் கடன் பெறுவதாக கூறி இருந்தது.
.
இரண்டு கிழமைகளுக்கு முன் கட்டார் அரச bond மூலம் $10 பில்லியன் கடன் பெற்று இருந்தது.
.
சிறிய நாடான குவைத் அடுத்த 10 ஆண்டு காலத்தில் சுமார் $65 பில்லியன் கடன்களை bond மூலம் பெற நடவடிக்கை எடுத்து வருகிறது.
.
இன்னோர் எண்ணெய்வள நாடான ஓமான் இந்த வருடத்துக்கான தனது செலவுகளை $1.3 பில்லியன் பெறுமதியால் குறைக்க முடிவு செய்துள்ளது. அதற்கு அமைய அனைத்து அமைச்சுக்களையும் தமது செலவுகளை 10% ஆல் குறைக்குமாறு பணிக்கப்பட்டு உள்ளது.
.
அதேவேளை சிங்கப்பூரின் முக்கிய எண்ணெய் வர்த்தக நிறுவனமான Hin Leong Trading Pte Ltd (HLT) கடந்த காலங்களில் ஏற்பட்ட $800 மில்லியன் நட்டங்களை மறைத்து வந்துள்ளமை தற்போது பகிரங்கத்துக்கு வந்துள்ளது. இந்த நிறுவனம் முதிலீடு செய்தோரிடம் இருந்து நீதிமன்றின் பாதுகாப்பை நாடியுள்ளது.
.
HLT நிறுவனம் மொத்தம் 23 வங்கிகளிடம் இருந்து $3.85 பில்லியன் கடன் பெற்றுள்ளது. அந்த வங்கிகள் தாம் கடன்களை மீள பெறுமா என்பது சந்தேகத்தில் உள்ளது.
.
1963 ஆம் ஆண்டில் சீனாவில் இருந்து சிங்கப்பூர் வந்திருந்த Oon Kuin Lim (O. K. Lim) என்பவரால் ஒரு எண்ணெய் பரிமாறும் வண்டி (truck) உடன் ஆரம்பிக்கப்பட்டதே HLT. தற்போது இந்த நிறுவனத்திடம் சுமார் 130 எண்ணெய் தாங்கி கப்பல்கள் உள்ளன.
.