அமெரிக்காவில் கானால் நீராகும் ஓய்வூதியம்

Detroit

December 3, 2013 அன்று அமெரிக்காவின் federal நீதிபதி Stephen Rhodes $18 பில்லியன் அளவில் கடனில் மூழ்கி bankruptcy ஆகவுள்ள Detroit நகர அரசு அதன் முன்னாள் ஊழியர்களின் ஓய்வூதியங்களை பெருமளவில் குறைக்க அனுமதி வழங்கியுள்ளார். மதிய, மாநில மற்றும் நகர மட்டங்களில் பல சட்டங்கள் இவ்வகை உழியர்களின் ஓய்வூதியங்களை பாதுகாத்திருந்தும், இந்த தீர்ப்பு அவற்றை பறித்துள்ளது. இந்த தீர்ப்பை முன்னோடியாக கொண்டு மேலும் பல மாநில மற்றும் நகர அரசுகள் தமது முன்னாள் உழியர்களுக்கான ஓய்வூதியங்களை பெருமளவில் குறைக்க முனையலாம் எனவும் கருதப்படுகிறது. குறைந்தது 23 சிறிய மற்றும் பெரிய அமெரிக்க நகரங்கள் ஏற்கனவே இந்நிலையில் உள்ளன.

தற்போதைய கணிப்புகளின்படி Detroit ஓய்வூதியர் ஒவ்வொரு டொலருக்கும் பதிலாக இனிவரும் காலங்களில் 16 சதங்களையே பெறக்கூடியதாக இருக்கும். உதாணரமாக 20 வருடங்கள் தீயணைப்பு படையில் பணிபுரிந்த ஒருவர் தபோது மாதம் $3,200 ஐ ஓய்வூதியமாக பெறுகின்றார். இனிவரும் காலங்களில் இவரின் மாத ஓய்வூதியம் மாதம் ஒன்றுக்கு $500 இருக்கும். Detroit இல் தற்போது சுமார் 23,500 நகர ஓய்வூதியர் உள்ளதாக கூறப்படுகிறது.

இங்குள்ள 36 அம்புலன்ஸ்களில் 25 வரை பழுதடைந்து திருத்தம் செய்ய பணம் இல்லது உள்ளது. இங்கு சுமார் 40% வீதி விளக்குகள் பழுதடைந்தும் மாற்றப்படாமல் உள்ளது.

அதேவேளை Chicago நகரின் போலிஸ் மற்றும் தீயணைப்பு உழியர்களின் ஓய்வூதிய முதலீடும் தேவையான அளவைவிட $19.5 பில்லியனை குறைவாக கொண்டுள்ளது. அதாவது தேவையான முதலீட்டின் 64% குறைவாக உள்ளது. Chicago நகர் உள்ள Illinois மாநில ஓய்வூதிய முதலீடும் மிக குறைவாகவே உள்ளன. இதன் ஓய்வூதிய முதலீடு $97 பில்லியன் வரை குறைவாக உள்ளது. இந்த மாநிலம் அண்மையில் ஓய்வூதியத்துக்கான வயதை உயர்த்தி உள்ளது.

அரச உழியர் நிலைமை போலவே bankruptcy ஆனா தனியார் நிறுவனக்களில் தொழில் புரிந்த பல ஓய்வூதியர் நிலைமைகளும் உள்ளன.