அமெரிக்காவில் கொரோனா தொற்றியோர் தொகை அதிகம்

Coronavirus

இன்றைய தவுகளின்படி உலகத்தில் அமெரிக்காவிலேயே அதிகம் பேர் கொரோனா வைரஸின் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இன்று அமெரிக்காவில் 82,404 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன் 1,178 பேர் அமெரிக்காவில் இந்த நோய்க்கு பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் குணமடடைந்தோர் தொகை 619 மட்டுமே.
.
சுமார் 330 மில்லியன் மக்களை கொண்ட அமெரிக்கா ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பை முறியடிக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை கொண்டிருக்கவில்லை. இந்த வைரஸ் மீது ரம்ப் அரசு கொண்டிருந்த உதாசீனமே அதற்கு முக்கிய காரணம்.
.
இரண்டாம் இடத்தில் உள்ள சீனாவில் தொற்றுக்கு உள்ளானோர் தொகை 81,782 ஆகவும், மூன்றாம் இடத்தில் உள்ள இத்தாலியின் தொகை 80,589 ஆகவும் உள்ளன.
.
கொரோனாவுக்கு பலியானோர் தொகையில் 8,215 மரணித்தோரை கொண்ட இத்தாலி முதலாம் இடத்திலும், 4,154 பலியானோரை கொண்ட ஸ்பெயின் இரண்டாம் இடத்திலும், 3,291 பலியானோரை கொண்ட சீனா மூன்றாம் இடத்திலும் உள்ளன.
.
உலக அளவில் அரை மில்லியனுக்கு மேலானோர் (526,044) பேர் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன் 23,709 பேர் பலியாகியும் உள்ளனர். அதேவேளை 122,066 பேர் குணமாகியும் உள்ளனர்.
.