அமெரிக்காவில் சீன பெண் போலீஸ் மீதும் தாக்குதல்

அமெரிக்காவில் சீன பெண் போலீஸ் மீதும் தாக்குதல்

ரம்ப் ஆட்சி காலத்திலும் , அதன் பின்னரான காலத்திலும் அமெரிக்காவில் சீனர்கள் மீதும், சீனர்கள் போல் தோற்றமளிப்போர் மீதும் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. ஆனால் இன்று செவ்வாய்க்கிழமை ஒரு சீன பெண் போலீசார் மீதும் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ (San Francisco) நகரில் ஒருவர் மக்களை வீதியில் மிரட்டுவதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. அதை விசாரிக்க அண்மையில் இருந்த போலீசார் ஒருவர் விரைந்துள்ளார். அவர் ஒரு சீன பெண்.

மக்களை மிரட்டியவரை போலீசார் விசாரணை செய்கையில், உருவத்தில் பெரிய அந்த நபர் உருவத்தில் சிறிய சீன பெண் போலீசாரை தள்ளி விழுத்தி தாக்கியுள்ளார்.

உடனே அவ்வழி சென்றோர் சீன போலீசாரின் உதவிக்கு விரைந்து சந்தேக நபரை கட்டுப்படுத்தினர். அத்துடன் இன்னோர் போலீசாரும் அங்கு விரைந்து சந்தேகநபரை கைது செய்துள்ளார்.

இந்த ஆண்டு முதல் 3 மாதங்களில் மட்டும் சீனர் அல்லது சீனர் போல் தோற்றமளிக்கும் ஆசியர் மீது 2,410 தாக்குதல்கள் இடம்பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.