அமெரிக்காவில் பூரண சூரிய கிரகணம்

Eclipse2017

அமெரிக்காவில் வரும் 21 ஆம் திகதி திங்கள் கிழமை பூரண சூரிய கிரகணம் தோன்றவுள்ளது. இந்த பூரண கிரகணம் அமெரிக்காவின் மேற்கு மாநிலமான Oregon வழி சென்று கிழக்கு மாநிலமான South Carolina வழியே போகும். 1979 ஆம் ஆண்டின் பின் அமெரிக்காவுக்கு கிடைக்கும் பூரண சூரிய கிரகணம் இதுவாகும். சில இடங்களில் பூரண கிரகணம் சுமார் 1 நிமிடம் 40 செக்கன்களுக்கு நிலைக்கும்.
.
பூரண கிரகணம் உள்ளபோது மட்டும் கண்ணால் அதை பார்ப்பது முடியும் என்று கூறப்படுகிறது. ஏனைய நேரங்களில் கிரகணத்தை நேரடியாக கண்களால் பார்ப்பது ஆபத்தானது. அதாவது பகுதி கிரகணத்தை பார்ப்பது ஆபத்தானது. பகுதி கிரகணங்களை பாதுகாப்பு கருவிகள் மூலமே பார்த்தால் அவசியம்.
.
இம்முறை Chicagoவுக்கு சுமார் 90% கிரகணமும், Torontoவுக்கு சுமார் 70% கிரகணமும் கிடைக்கும். மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கும் பகுதி கிரகணம் கிடைக்கும். நூறு வீத கிரகணம் பூரண கிரகணமாக குறிப்பிடப்படும்.
.

பூரண கிரகணம் கிடைக்கும் பாதையின் அகலம் சுமார் 113 km ஆக இருக்கும்.
.