அமெரிக்காவில் 5000 புலிகள்

Tiger

உலகம் எங்குமுள்ள காடுகளில் 3200 வரையான புலிகள் மட்டும் வாழ்கையில் அமெரிக்காவில் 5000 வரையான புலிகள் வாழ்வதாக மிருக நலன் நிறுவனமான WWF (World Wildlife Fund) தெரிவித்துள்ளது. இந்த 5,000 அமரிக்க புலிகளில் 6% புலிகள் (300 புலிகள்) மட்டுமே சட்டப்படியான மிருகசாளைகளில் (Zoo) உள்ளன. ஏனையவை தனியார் நிருவனக்களிடமும் தனியாரிடமும் உள்ளன.
.
அண்மை காலங்களில் திருத்தமான புலி எண்ணிக்கையை அறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் முனைந்துள்ளன. பூட்டான் தம்மிடம் மொத்தம் 103 புலிகள் உள்ளதாக கூறியுள்ளது. 2010 ஆம் ஆண்டில் மலேசியா தம்மிடம் 500 புலிகள் வரை இருப்பதாக கூறி இருந்திருந்தாலும் தற்போது 250 புலிகள் வரையே இருப்பதாக கூறியுள்ளது.
.
2010 ஆம் ஆண்டில் தம்மிடம் 1,706 புலிகள் வரை இருப்பதாக இந்தியா கூறியிருந்தாலும் தற்போது 2,226 புலிகள் வரை உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேவேளை 2014 ஆம் ஆண்டில் 61 புலிகள் அங்கு இறந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
.
சுமார் 100 வருடங்களின் முன் உலகில் 100,000 புலிகள் இருந்ததாக கணிக்கப்பபட்டுள்ளது. புலிகளின் உடல் பாகங்களை எடுக்கும் நோக்கில் திருடர்கள் அவற்றை கொல்லுதல், மனித பாவனைக்காக புலிகளின் வாழ்விடங்கள் எடுக்கப்படல், குயிருப்புக்களுள் நுழைந்த புலிகளை பாதுகாப்பின் நிமித்தம் கொல்லுதல் போன்ற காரணங்கள் புலி அழிவை வேகப்படுத்துகின்றன. ஒரு புலியில் இருந்து எடுக்கும் பாகங்கள் சுமார் $50,000 க்கு விற்பனை செய்யப்படலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.
.
சுயாதீன புலிகள் (wild tigers) இந்தியா, நேபால், பூட்டான், பங்களாதேசம், மலேசியா, தாய்லாந்து, பர்மா, லாஒ (Lao), கம்போடியா, வியட்னாம், இந்தோனேசியா, சீனா, ரஷ்யா ஆகிய 13 நாடுகளில் மட்டுமே தற்போது உள்ளன. புலிகளில் மிகவும் பெரியவை சைபீரியன் (Siberia) புலிகள். அவை சுமார் 660 இறாத்தல் பாரம் கொண்டவை. மிக சிறிய புலிகள் சுமத்திரா புலிகள். அவை சுமார் 310 இறாத்தல் பாரம் கொண்டவை.

.