அமெரிக்காவுக்கு இந்திய InfoSys $34 மில்லியன் தண்டம்

InfoSys

InfoSys இந்தியாவின் மிகப்பெரியதோர் software நிறுவனம். பெங்களூர், கர்நாடகாவில்தலைமையகத்தை கொண்ட இது உலகளவில் சுமார் 160,000 பணியாளர்களை கொண்டது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 30,000 பணியாளர் உண்டு. இதன் வருட வருமானம் $7.3 பில்லியனுக்கும் அதிகம். நிகர இலாபம் $1.7 பில்லியனுக்கும் அதிகம்.

அண்மையில் இதன் அமெரிக்க பணியாளர் Jay Palmer சில உள்வீட்டு உண்மைகளை பகிரங்கப்படுத்தினார். அதனை தொடர்ந்து அமெரிக்க அரசு விசாரணைகளை தொடங்கியது.

அமெரிக்காவில் 3 வருடம் வரை பணியாற்ற விரும்பும் இந்திய தொழிநுட்ப பணியாளர்க்கு அமெரிக்க H-1B விசா வழங்குவது முறைமை. இதற்கு சுமார் $5,000.00 செலவாகும். அதுமட்டுமன்றி வருடம் ஒன்றுக்கு 65,000 விசாக்களே வழங்கப்படும்.

அதேவேளை சில நாட்கள் அல்லது கிழமைகள் தங்கி மாநாடுகள், விரிவுரைகள் போன்றவற்றில் பங்குகொள்வோருக்கு B-1 விசா வழங்கப்படும். சில நாட்களில் கிடைக்கும் இதற்கு $150.00 வரையே செலவாகும்.

InfoSys B-1 பெற்ற பலரை முழுநேர பணியாளர்களாக பயன்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த பணியாளர்க்கு அமெரிக்க ஊதியம் வழங்காது மிக குறைந்த ஊதியமே வழங்கப்படுள்ளது. அதுமட்டுமன்றி அமெரிக்காவில் தேவையான பணியாளர் உள்ள துறைகளுக்கு வெளிநாடுகளில் இருந்து பணியாளரை அழைக்கவும் முடியாது. InfoSys இவ்விடயத்திலும் தில்லுமுல்லு செய்ததாக Jay Palmer கூறியுள்ளார்.

அமெரிக்க அரசின் விசாரணைகளின் பின் InfoSys சுமார் $34 மில்லியன் குற்றப்பணம் செலுத்த இணங்கியுள்ளதாக கூறப்படுகிறது.