அமெரிக்காவுக்கு ரஷ்யா டீசல் வழங்கும், ரம்பின் அறிவிப்பு 

அமெரிக்காவுக்கு ரஷ்யா டீசல் வழங்கும், ரம்பின் அறிவிப்பு 

அமெரிக்காவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் ரஷ்யா டீசல் எரிபொருள் வழங்கும் என்று அமெரிக்க சனாதிபதி வெள்ளிக்கிழமை கூறியுள்ளார். அமெரிக்காவுக்கு மட்டும் உடனடியாக 300,000 தொன் (2.25 மில்லியன் பரல்) டீசலை ரஷ்யா வழங்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் 500,000 தொன் டீசல் நவம்பர் 3ம் திகதி அமெரிக்கா வருமாம். ரஷ்ய டீசலுக்கான இறக்குமதி உரிமையையும் அமெரிக்கா அடுத்த ஆண்டு ஏப்ரல் 7ம் திகதி வரை நீடித்துள்ளது.

நவம்பர் 3ம் திகதியே அமெரிக்காவில் mid-term தேர்தல் இடம்பெறவுள்ளது. அமெரிக்காவில் டீசலின் விலை 70% ஆல் அதிகரித்து போக்குவரத்துக்கு கூலி அதிகரிக்க பொருட்களின் விலைகளும் அதிகரித்த நிலையில் நவம்பர் தேர்தலில் ரம்பின் Republican கட்சி காங்கிரசை இழக்கும் நிலையில் உள்ளது. Republican கட்சி காங்கிரசை இழந்தால் அது ரம்புக்கு கொடுமையாக அமையும்.

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்வதால் இந்தியா போன்ற நாடுகளை தண்டித்து மறுபுறம் தான் எரிபொருளை ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்கிறது அமெரிக்கா.

அமெரிக்கா நடைமுறை செய்த ரஷ்ய எரிபொருள் மீதான தடையை தாமே கைவிட்டு ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய இணங்கியதை ரம்ப் “highly successful” பேச்சுவார்த்தை என்று கூறியுள்ளார்.

மேற்கு நாடுகளை நம்பி ரஷ்யாவுடன் யுத்தம் செய்ய சென்ற யூக்கிறேன் சனாதிபதி ரம்பின் நகர்வை “Gifts to Putin” என்று சாடியுள்ளார்.

ரஷ்யாவின் டீசல் ஹோர்முஸ் முடக்கத்தால் ஏற்பட்ட மத்திய கிழக்கின் டீசல் இழப்பை ஈடுசெய்ய முடியாது. அதனால் எரிபொருள் தட்டுப்பாடு தொடரும்.