அமெரிக்காவும் ரஷ்யாவும் முறுகல் நிலையில்

USRussia

Ukraine விடயத்திலும், சிரியா விடயத்திலும் முரண்பட்ட கொள்கைகளை கொண்டுள்ள அமெரிக்காவும், ரஷ்யாவும் ஏட்டிக்கு போட்டியாக தம்முள் முரண்பட ஆரம்பித்து உள்ளனர்.
.
கடந்த 24 மணித்தியாலங்களுள் ரஷ்யா தாம் 2000 ஆண்டளவில் அமெரிக்காவுடன் செய்துகொண்டிருந்த plutonium உடன்படிக்கையை தற்கலிகமாக  இடை நிறுத்துவதாக கூறியிருந்தது. இந்த உடன்படிக்கையின்படி இருதரப்பும் தலா 34 தொன் எடையுடைய ஆயுத தர plutonium கையிருப்பை அழித்தல் வேண்டும். இந்த 34 தொன் plutonium சுமார் 8500 nuclear ஆயுதங்களை உருவாக்க போதுமானது.
.
ரஷ்யாவின் நடத்தையால் கோபம் கொண்ட அமெரிக்கா, ரஷ்யாவுடனான உடனடியாக இருதரப்பு தொடர்புகளையும் இன்று இடை நிறுத்தம் செய்துள்ளது.
.
Ukraine விடயத்திலும், சிரியா விடயத்திலும் ரஷ்யாவின் உதவி இன்றி அமெரிக்கா எதையும் செய்ய முடியாமல் உள்ளது. தற்போது அமெரிக்கா மூன்று முனைகளில் பிரச்சனைகளை சந்திக்கிறது. முதலாவது IS, இரண்டாவது ரஷ்யா, மூன்றாவது சீனா.
.

இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே ஆடசியில் இருக்கப்போகும் ஒபாமா, இவ்விடயங்களில் பெரு மாற்றங்கள் செய்யாது நழுவக்கூடும். அப்படியானால் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி பெரும் தொல்லைகளை கையாள நேரிடும்.
.