அமெரிக்காவை தாக்கவுள்ள சூறாவளி Laura

அமெரிக்காவை தாக்கவுள்ள சூறாவளி Laura

அமெரிக்காவின் Texas மற்றும் Louisiana மாநிலங்களின் எல்லையோர, மெஸ்க்சிகோ வளைகுடா கரையோரம் Category 4 பலம் கொண்ட சூறாவளியாக தாக்கவுள்ளது சூறாவளி லாரா (Laura). உள்ளூர் நேரப்படி இந்த சூறாவளி வியாழன் அதிகாலை கரையை தாக்கும் என்று கூறப்படுகிறது

தற்போது மெக்ஸிகோ வளைகுடாவில் நிலைகொண்டுள்ள Laura சுமார் 240 km/h காற்று வீச்சை கொண்டுள்ளது. இது கரையை தாக்கும்போது சுமார் 225 km/h காற்றுவீச்சை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. அத்துடன் சில கரையோர பகுதிகளில் வெள்ளம் 15 அடி முதல் 20 அடி வரையில் உயரும் என்றும் கூறப்படுகிறது. இப்பகுதிகள் பொதுவாக தாழ்வான இடங்கள்.

கரையோரம் உயரும் வெள்ளம் 65 km தூரம் நாட்டுக்கு உள்ளேயும் நகரலாம் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு அமெரிக்காவை தாக்கும் மிக பெரிய சூறாவளியாக லாரா அமையும்.

இப்பகுதிகளில் உள்ள மக்கள் பெரும்பாலும் வேறு இடங்களுக்கு நகர்த்தப்பட்டு உள்ளனர். உல்லாச பயணிகளின் முக்கியத்துவம் கொண்ட Galveston போன்ற இடங்களின் மக்கள் Dallas நகர் நோக்கி நகர்ந்து உள்ளனர்.

2005 ஆம் ஆண்டு Katrina என்ற Category 5 பலம் கொண்ட சூறாவளி சற்று கிழக்கே உள்ள New Orleans என்ற Louisiana மாநிலத்து நகரை தாக்கியபோது 1,800 பேர் பலியாகி இருந்தனர்.