அமெரிக்கா, ஈரான் கைதிகளை பரிமாறின

Iran-Nuclear

பகிரங்கத்தில் அமெரிக்காவும், ஈரானும் வசைபாடிக்கொண்டாலும் மறைவில் அவர்கள் தம்மிடம் உள்ள கைதிகளை பரிமாறும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு உள்ளனர். அதன் விளைவாக இரு தரப்பும் தம்மிடம் இருந்த கைதிகளை விடுதலை செய்துள்ளனர்.
.
இன்று வியாழன் ஈரான் தன்னிடம் இருந்த அமெரிக்க கைதியான 48 வயதுடைய Michael White என்பவரை விடுதலை செய்துள்ளது. கடந்த 683 தினங்களாக ஈரானில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த White தற்போது சுவிஸ் அரசின் விமானத்தில் அமெரிக்கா நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்.
.
முன்னாள் அமெரிக்க கடல் படை உறுப்பினரான இவர் கரோனா வரைஸ் தொற்றி உள்ளதுடன், ஒரு புற்றுநோயாளியும் ஆவார். அவர் ஈரானில் 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வந்தவர்.
.
White ஐ ஈரான் விடுதலை செய்ய ஒரு தினம் முன்னர், புதன் கிழமை, அமெரிக்கா தான் கைது செய்து வைத்திரிருந்த ஈரானின் விஞ்ஞானி ஒருவரான Sirous Aagari என்பவரை விடுதலை செய்திருந்தது. அவர் தற்போது ஈரான் சென்றுள்ளார்.
.
ஆனாலும் அமெரிக்க அதிகாரிகள் இரண்டு விடுதலைக்கும் தொடர் இல்லை என்றுள்ளனர்.
.
கடந்த டிசம்பர் மாதமும் அமெரிக்காவும், ஈரானும் இரண்டு கைதிகளை பரிமாறி இருந்தன. தமது கைதி ஒருவரை மீளப்பெற்ற ஈரான், Xiyue Wang என்ற அமெரிக்க கைதியை விடுதலை செய்து இருந்தது.
.