அமெரிக்கா சர்வதேச குற்ற நீதிமன்றை தண்டிக்கும்

JohnBolton

அமெரிக்காவின் ஜனாதிபதி ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (national security adviser) John Bolton இன்று திங்கள் சர்வதேச குற்ற நீதிமன்றத்துக்கு (ICC) கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் செய்ததாக கூறப்படும் குற்றங்களை ICC விசாரணை செய்ய முனைந்தால் தாம் ICC யையும் அதன் நீதிபதிகள் உட்பட்ட அதிகாரிகளையும் தண்டிக்கவுள்ளதாக Bolton கூறியுள்ளார்.
.
“The ICC is already dead to us” என்றும் அவர் கூறியுள்ளார். அதாவது எங்களை பொறுத்தமட்டில் ICC ஏற்கனவே செத்த ஒன்று என்று அவர் கூறியுள்ளார்.
.
கடந்த நவம்பர் மாதம் ICC அதிகாரியான Fatou Bensouda ஆப்கானிஸ்தானில் 2002 ஆம் ஆண்டில் அமெரிக்க இராணுவத்தினரும், CIA அதிகாரிகளும் செய்த குற்ற செயல்களை விசாரிக்க அனுமதி கேட்டிருந்தார். அந்த வகை விசாரணைக்கே இந்த வகை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
.
ICC விசாரணையில் தொடர்பு கொண்டவர்களின் சொத்துக்களை முடக்கவும், அவர்கள் அமெரிக்கா செல்லவிடாது தடுக்கவும் உள்ளதாக Bolton கூறியுள்ளார். அத்துடன் ICC அமைப்புடன் இணைந்து செயல்படும் நாடுகளையும் தாம் தண்டிக்கவுள்ளதாக Bolton கூறியுள்ளார்.

.