அமெரிக்கா சிரியா மீது 59 ஏவுகணை தாக்குதல்

Syria

சிரியாவின் நேரப்படி இன்று வெள்ளி அதிகாலை 4:30 மணியளவில் அமெரிக்கா Tomahawk ஏவுகணைகளை (Tomahawk missiles) ஏவியுள்ளது. அண்மையில் சிரியாவின் அரசாங்கம் எதிரிகள் பகுதியில் chemical குண்டுகளை வீசி சுமார் 80 பேரை கொலை செய்துள்ளது என்று கூறியே அமெரிக்கா இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளது.
.
அமெரிக்காவின் இந்த தாக்குதலில் சுமார் 59 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வெரு Tomahawk ஏவுகணையும் சுமார் 18 அடி நீளமும் 2 அடி அகலமும் கொண்டது.
.

அனைத்து ஏவுகணைகளும் Shayrat Airfield என்ற ஒரு சிறிய விமான தளத்தை நோக்கியே ஏவப்பட்டு உள்ளன. அத்துடன் இந்த ஏவுகணைகள் யுத்த கப்பல் ஒன்றில் இருந்தே ஏவப்படு உள்ளன.
.

சிரியா அரசின் எதிரிகளுக்கு பண, ஆயுத, தொழிநுட்ப உதவிகளை அமெரிக்கா செய்து வந்திருந்தாலும் இம்முறையே முதல் தடவையாக அமெரிக்கா சிரியா மீது தாக்குதலை நிகழ்த்தி உள்ளது.
.