அமெரிக்கா, சீனா 90 தின வரி யுத்த நிறுத்தம்

அமெரிக்கா, சீனா 90 தின வரி யுத்த நிறுத்தம்

அமெரிக்காவும், சீனாவும் அடுத்து வரும் 90 தினங்களுக்கு ஒரு இடைக்கால வரி யுத்த நிறுத்தத்தை அறிவித்து உள்ளன. அதற்கு பின் என்னவாகும் என்பதை 90 தினங்களில் இடம்பெறும் பேச்சுக்கள் தீர்மானிக்கும்.

இந்த தற்காலிக வரி குறைப்பின் படி, ரம்ப் சீன பொருட்களுக்கு விதித்த 145% வரி வரும் 90 தினங்களுக்கு 30% ஆக குறைக்கப்படும். அதேவேளை சீனா தனது அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை 125% இல் இருந்து 10% ஆக குறைக்கும். ஏனைய வரிகள், தடைகள் தொடரும்.

பேச்சுக்கு முன் ரம்ப் 145% வரி மிக அதிகம் என்றும், 80% இறக்குமதி வரியே சரியான அளவு என்று கூறியிருந்தார். ஆனால் சீனாவின் நெருக்குதல் காரணமாக அது தற்போது 30% ஆகியுள்ளது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் ஆண்டு ஒன்று சுமார் $600 பில்லியன் ஆகும்.

பொதுவாக பொருட்கள் சீனாவில் கொள்வனவு இணக்கம் செய்யப்பட்டு, அவை உற்பத்தி செய்யப்பட்டு, கப்பலில் அப்பொருட்கள் அமெரிக்காவை அடைய பல மாதங்கள் தேவை. இந்நிலையில் 90 தின இறக்குமதி வரி குறைப்பு நலன் எதையும் செய்யுமா என்பது தற்போதைக்கு அறியப்படாது.