அமெரிக்கா பொருளாதார மிரட்டல், ரஷ்யா இராணுவ மிரட்டல்

அமெரிக்கா பொருளாதார மிரட்டல், ரஷ்யா இராணுவ மிரட்டல்

அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் மீண்டும் முறுகல் நிலை தோன்றியுள்ளது. அண்மையில் ரஷ்யா சுமார் 90,000 படையினரை யுக்கிரைன் எல்லைக்கு நகர்த்தி இருந்தது. ரஷ்யா மீண்டும் யுக்கிரைன் உள்ளே நுழைய திட்டமிடுகிறது என்று கருதிய மேற்கு நாடுகள் எச்சரிகைகளை விடுத்தன.

குறிப்பாக அமெரிக்க சனாதிபதி பைடென் ரஷ்யா சனாதிபதி பூட்டினுடன் இணையம் மூலம் உரையாடி தனது விசனத்தை தெரிவித்து உள்ளார். ரஷ்யா யுக்கிரைனுள் நுழைந்தால் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்றும் பைடென் கூறியுள்ளார்.

பதிலுக்கு இன்று வியாழன் ரஷ்யா விடுத்த மிரட்டலில் 1962ம் ஆண்டு இடம்பெற்ற Cuban missile crisis போன்றதொரு நெருக்கடி மீண்டும் உருவாகலாம் என்று கூறப்பட்டுள்ளது. Cold-war காலத்தில் இடம்பெற்ற மேற்படி முறுகல் நிலை அமெரிக்காவுக்கும், சோவியத்துக்கும் இடையில் அணு ஆயுத யுத்தத்தை ஆரம்பிக்கும் நிலைக்கு அவர்களை தள்ளியது. அதை தடுத்த பெருமை John F. Kennedy க்கு உரியது.

Kennedy அமெரிக்கா கியூபாவை ஆக்கிரமிக்காது என்று உத்தரவாதம் அளித்த பின்னரே சோவியத் தனது அணு ஏவுகணைகளை கியூபாவில் இருந்து திருப்பி எடுத்து இருந்தது. அமெரிக்கா துருக்கியில் இரகசியமாக வைத்திருந்த அணு ஏவுகணைகளும் அமெரிக்கா எடுக்கப்பட்டன.

தற்போது NATO யுக்கிரைனை ஒரு அங்க நாடாக இணைக்க முயற்சி செய்கிறது. அவ்வாறு செய்தால் NATO ரஷ்யாவின் எல்லைக்கு வரும். அதை தடுக்க ரஷ்யா எதையும் செய்ய முனைகிறது.