அமெரிக்கா மீதான இணைய தாக்குதல் மிக பாரதூரமானது

அமெரிக்கா மீதான இணைய தாக்குதல் மிக பாரதூரமானது

கடந்த கிழமை அமெரிக்காவின் மத்திய, மாநில, நகர அரசுகள் மீதும், பெரிய கூட்டுத்தாபனங்கள் மீதும் இடம்பெற்ற இணைய தாக்கல் மிக பாரதூரமானது (grave risk) என்று அமெரிக்காவின் Cybersecurity and Infrastructure Security Agency (CISA) கூறியுள்ளது. கடந்த கிழமை கண்டறியப்பட்ட இந்த இணைய தாக்குதல் உண்மையில் கடந்த மார்ச் மதமே ஆரம்பித்து உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு பயப்படுத்தப்பட்ட malware ஐ பாதிக்கப்பட்ட கணனிகளில் இருந்து நீக்குவதும் மிக சிரமமானது (highly complex and challenging) என்று கூறப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் உளவு அமைப்பான SVR (முன்னாள் KGB) இந்த தாக்குதலுக்கு பின்னால் உள்ளதாக அமெரிக்கா கருதுகிறது. தாக்குதலின் அதிசிறந்த தரமே அமெரிக்கா ரஷ்யாவை சந்தேகிக்க காரணம். ஆனால் தாம் இந்த தாக்குதலை செய்யவில்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது.

Cozy Bear என்ற இணைய தாக்குதல் குழுவே இந்த தாக்குதலை செய்துள்ளதாக அமெரிக்கா நம்புகிறது. அது ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள குழு என்றும் மேற்கு கருதுகிறது.

அமெரிக்காவின் Department of Commerce, Department of Homeland Security, Pentagon, Treasury Department, அமெரிக்க Postal Services, National Institute of Health, Department of Energy ஆகிய திணைக்களங்கள் அதிகமாக தாக்கப்பட்டு உள்ளன.

Department of Energy அமெரிக்காவின் அணு ஏவுகணைகளை கையாளும் கட்டமைப்புக்களையும் உள்ளடக்கும்.

மேற்படி திணைக்களங்களுக்கு இணைய பாதுகாப்பு வழங்கும் SolarWind என்ற நிறுவனத்தின் Orion என்ற பாதுகாப்பு software ஐ ஊடுருவி, அதன் மூலமே தாக்குதல் செய்யப்பட்டு உள்ளது.